பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1ப

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 2

203

    1பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட, உடையவரும் நீங்களும் ஒரு தலையானால் உங்களைக் கைக்கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?’ என்றபடி, 2பழைமை பார்ப்பரோ, அவன் தானும் இவனைப் பற்ற ‘பிரணான்களை விட்டு’ என்னா நிற்க? அயோத்தியில் வாழும்-வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது, அத்தேசவாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே; 3‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும், ‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’ என்றும், சொல்லுகிறபடியே, ‘அயோத்தியில் வாழும்’ என்கிறார், 4பிராப்பிய தேசத்தில் வசிப்பதுதான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ? 5நித்தியப் பிராப்பியமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளியிருக்கிறது? 6நமக்கு

____________________________________________________________________

1. மேற்சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘பிராணன்கள்’ என்று தொடங்கி.
  ‘பழைமையாலே பல் காட்ட’ என்றது, ‘எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்;
  அதாவது, காப்பாற்ற வேண்டும்,’ என்கின்றன என்றபடி. ‘உடையவர்’ என்றது,
  ஸ்ரீராம்பிரானை. ‘உடையவரும் நீங்களும் ஒரு தலையானால்-இருவரும் நமக்கே
  பரமானால். உங்களைக் கைக்கொள்ளப் போமோ-உடையவராகிய சேஷியை விட்டு
  உங்களைக் கைக்கொள்ளப் போமோ?’ என்றபடி.

2. ‘பழைமை பார்க்க வேண்டாவோ?’ என்ன, பழைமை பார்ப்பரோ?’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். அவன் தானும்-அவ்விராமபிரானும்.

    ‘ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
     ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’

என்பது, ஸ்ரீராமா. உத். 18 : 18.

3. கூறிய பொருளுக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘வேங்கடத்தை’ என்றும்,
  ‘நல்லார்கள்’ என்றும் தொடங்கி. இவை முறையே, நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.

4. வசித்தலையே வாழ்வாகச் சொல்லுவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘பிராப்பிய தேசத்தில்’ என்று தொடங்கி.

4. ‘பிராப்பியதேசம் பரமபதமாக இருக்க, இதனைப் பிராப்பியதேசம் என்கைக்குக்
  காரணம் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நித்தியப் பிராப்பியமான
  பொருள் அண்மையில் இருந்தால் யாதானும் ஒரு காலத்தில் நமக்கு அனுபவம்
  உண்டாவதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘நமக்கு’ என்று தொடங்கி.