ந
|
206 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
நாட்டிற்பிறந்தவர் -
1இப்பாசுரத்தில், ‘திருவயோத்தியிலுள்ளாரை இராம குணங்களையே தாரகராம்படி செய்த
அளவையோ, நாட்டிலுள்ளாருடைய விரோதிகளைப் போக்கிக் காப்பாற்றும் விதம் உயர்ந்தது இல்லையோ?’
என்கிறார். நாட்டிற்பிறந்தவர் - 2‘நாட்டிற் பிறவாதார் இலரே அன்றோ? ஆயின்,
‘நாட்டிற்பிறந்தவர்’ என்றதற்குப் பொருள்தான் யாதோ?’ எனின், இராம குணங்கள் நடையாடும்
இடத்திலே பிறந்தவர்கள் என்கிறது. 3பெருமாளுடைய எல்லை இல்லாத இடம் இல்லை அன்றோ?
‘மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இட்சுவாகு குலத்து அரசர்களைச்
சேர்ந்தது.’ என்கிறபடியே. 4‘விதிக:ஸஹி தர்மஜ்ஞ:- ‘இராவணா!! பெருமாளுடைய குணங்கள்
கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ? 5அந்தக் குணங்கள் நடையாடாதது ஓரிடம் உண்டானால்
அன்றோ, அவ்விடம் இவர் எல்லை அன்றிக்கே இருப்பது? 6நாட்டில் பிறக்கையாவது,
அவருடைய எல்லைக்குள்ளே
_____________________________________________________________________
1. முதல் திருப்பாசுரத்தில்
கூறிய குணத்தைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்தில்
கூறப்படுகின்ற குணம் உயர்ந்தது என்கிறார்,
‘இப்பாசுரத்தில்’ என்று தொடங்கி.
2. ‘நாட்டிற்பிறவாதார்
இவரே அன்றோ?’ என்றது, ‘சேதாநராகில் யாதாயினும் ஒர்
ஊரில் பிறவாமல் இருப்பதற்கு இல்லை
அன்றோ?’ என்றபடி.
3. ‘நன்று; இராமகுணங்கள்
நடையாடுகிற இடம் என்ன வேண்டுமோ? பெருமாளுடைய
தேசத்திலே பிறந்தவர்கள் என்ன ஒண்ணாதோ?’
என்ன, ‘அங்ஙனம் கூறின்,
அதற்குக் குற்றம் உண்டு’ என்கிறார், ‘பெருமாளுடைய’ என்று தொடங்கி.
‘இக்ஷ்வாகூணாம் இயம்பூமி;
ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ
ப்ரக்ரஹாவபி’
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 18 :
6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
4. ‘இராமகுணங்கள் நடையாடும்
இடத்திலே பிறந்தவர்கள் என்று கூறுவதற்கும்
குற்றம் உண்டு’ என்கிறார், ‘விதித;’ என்று தொடங்கி.
என்றது, ‘பகைவர்கள்
கூட்டத்திலும் இவர் குணங்கள் நடையாடுகையாலே இப்பொருளும் பொருந்தாது,’
என்றபடி. ‘விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ என்பது, ஸ்ரீராமா.
சுந். 21 : 20.
இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
5. மேலே கூறிய குற்றங்கள்
இரண்டனையும் சேரப்பிடித்து அருளிச்செய்கிறார்,
‘அந்தக் குணங்கள்’ என்று தொடங்கி.
6. ‘நாட்டில்
பிறந்தவர்’ என்பதன் கருத்துதான் யாதோ?’ எனின், அருளிச்செய்கிறார்,
‘நாட்டில் பிறக்கையாவது’
என்று தொடங்கி.
|