New Page 1
|
214 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பொ-ரை :
‘பகைவனைப் பற்றிய நிந்தை மொழிகளைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பமுள்ளவர்களுடைய செவிகளையும்
சுடக்கூடிய தாழ்ந்த வகைச் சொற்களையே பேசிய, பல காலமாக வருகின்ற பழம்பகைவனான சிசுபாலன்,
கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்த தன்மையை அறிவாரான ஞானிகளை அறிந்து வைத்திருந்தும் தாங்கள்
உய்வதற்குரிய வழியைக் கேட்கவேண்டும் என்று இருப்பவர்கள் கேசவனுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு
சிலவற்றையும் கேட்பாரோ?’ என்கிறார்.
வி-கு :
‘தன்மை அறிவாரை அறிந்தும், கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’
என்க.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்ட மேலான
கிருபையை அறிந்தவர்கள், கேசியைக் கொன்ற கிருஷ்ணனுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’
என்கிறார்.
கேட்பார்கள் -
2மேலே ‘கற்பரோ’ என்றது; அதாவது, முதல் நடு இறுதி தன் நெஞ்சிலே ஊற்றிருக்குபடி
வாசனை பண்ணுகையாயிற்று; இனி கேட்கையாவது, கற்றுக் கேட்டுத் தெளிந்திருப்பான் ஒருவன் ஒரு
பொருளை விரித்துப் பேசினால், அதனைப் புத்தி பண்ணி நம்பியிருத்தல். 3நடுவிருந்த
நான்கு நாள்களும் தன் நெஞ்சு தெளிவு பிறந்தது இல்லையேயாகிலும் விழுக்காட்டில் இருவர்க்கும்
பரம் ஒத்திருக்கக்கடவது. 4கற்றிலன் ஆகிலும் கேட்க வேண்டுவது
____________________________________________________________________
1. திருப்பாசுர முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘மேல் திருப்பாசுரத்தில்
‘கற்பரோ’ என்றார்; இத்திருப்பாசுரத்தில் ‘கேட்பரோ’
என்கிறார்; இவ்விரண்டிற்கும் வேற்றுமை
யாது?’ என்ன, அதற்கு விடை
அருளச்செய்கிறார்., ‘மேலே’ என்று தொடங்கி. அதாவது-கற்கையாவது.
ஊற்றிருக்கும்படி-மாறாதே தங்கியிருக்குபடி.
3. ‘ஆயின், ஓர் ஆசாரியனிடத்தில்
ஐயம் திரிபுகள் அறக் கற்றவனுக்கு ஒழியக்
கேட்டவனுக்கும் உஜ்ஜீவனும் உண்டோ?’ என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார். ‘நடு இருந்த’ என்று தொடங்கி. இருவர்க்கும் - கற்றவனுக்கும்
கேட்டவனுக்கும்.
பலம் - பகவானை அடைதல்.
4. ‘நன்று; கல்லாதவனுக்குக்
கேட்பதற்குதான் அதிகாரம் உண்டோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘கற்றிலனாகிலும்’
என்று தொடங்கி.
‘கற்றில னாயினும்
கேட்க; அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந்
துணை.’
என்பது, திருக்குறள்.
|