பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

216

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    கேசவன் கீர்த்தி அல்லால் - 1பகைவர்களை அழிக்குந்தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது வேறே சிலவற்றைக் கேட்பரோ? 2பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது; பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது? 3விரோதிகளை அழிப்பதுதான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி. நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம்போன்று கிருஷ்ணனுடைய திருக்கரத்தால் இரண்டாகச் செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே, கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற, இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம்போலே இருபிளவாய் விழுந்தான். மற்றுங்கேட்பரோ - 4மேலே கூறிய இராமனுடைய சரிதையைத்தான் கேட்பரோ? 5இவர் சுபாவம் இருந்தபடி என்?

_____________________________________________________________________

1. ‘கிருஷ்ணன் கீர்த்தி’ என்னாமல், ‘கேசவன் கீர்த்தி’ என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘பகைவர்களை’ என்று தொடங்கி.

2. பகைவர்களை அழிப்பது சீலமாக இருக்கிறபடியை விவரிக்கிறார் ‘பருவம்’ என்று
  தொடங்கி. ‘கற்ற பின்பு அன்று’ என்றது, ‘ஞானம் பிறந்த பின்பு அன்று’ என்றபடி.

3. மேலே கூறியதனை விவரணம் செய்கிறார், ‘விரோதிகளை’ என்று தொடங்கி.
  உதாரணமுகத்தால் விளக்குகிறார், ‘நஞ்சு’ என்று தொடங்கி. கேசியைக்
  கொன்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நன்றாக’ என்று தொடங்கி.

        ‘வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
         நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14. இந்தச் சுலோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்
‘பாஹூநா’ என்றதற்கும், ‘த்விதாபூத;’ என்றதற்கும் கருத்து அருளிச்செய்கிறார்,
‘இளைஞராயிருப்பர்’ என்று தொடங்கி.

4. ‘மற்றும்’ என்பதற்கு, ‘வேறு விஷயங்களை’ என்று மேலே பொருள்
  அருளிச்செய்தார்; வேறு அவதாரங்களை என்று பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘மேலே கூறிய’ என்று தொடங்கி.

5. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘இவர் சுபாவம்’ என்று தொடங்கும் வாக்கியம்.