தன
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
4 |
223 |
தன்மை அறிபவர்தாம் -
உண்மை நிலையினை அறியுமவர்தாம். என்றது, ‘இதனுடைய படைப்பு 1அவனுக்காகக் கண்டது
என்று இருக்குமவர்கள்’ என்றபடி; 2‘காட்டில் வசிக்கும்பொருட்டே படைக்கப்பட்டாய்’
என்பது போலே. அன்றிக்கே, 3‘உலகத்திற்குக் காரணமாகவுள்ள பொருளே உபாசிக்கத்
தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல். ‘காரணப்பொருளே தியானம் செய்யத்தக்கது’ என்பது சுருதி.
‘வேதத்தின் பூர்வபாகத்தின் பொருளை விசாரித்தபின் ஞானமுடையவனாய்ப் பிரஹ்மத்தை அறியக்கடவன்’
என்னா, ‘இந்த உலகத்திற்குப் படைப்பு அளிப்பு அழிப்பு என்னும் முத்தொழில்களும் எதனிடத்தினின்றும்
உண்டாகின்றனவோ, அது பிரஹ்மம்’ என்னாநின்றதே அன்றோ? அவற்கு ஆள் அன்றி ஆவரோ - 4கரண
களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை
__________________________________________________________________
1. ‘அவனுக்காகக் கண்டது’
என்றது, ‘அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப்
படைக்கப்பட்டது’ என்றபடி.
‘கோளில்
பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத்
தலை.’
என்பது, திருக்குறள்.
‘திருமால்சீர்
கேளாத செவிஎன்ன செவியே!’
‘நாராய ணாவென்னா
நாவென்ன நாவே!’
‘கண்ணனைக் காணாத
கண்ணென்ன கண்ணே!’
என்பவை, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர்
குரவை.
2. மேலே கூறியதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘காட்டில்’ என்று தொடங்கி.
‘ஸ்ருஷ்டஸ்த்வம்
வநவாஸாய’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 40
: 5. இஃது இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திரா தேவி கூறியது.
3. ‘தன்மை அறிபவர்’ என்பதற்கு,
வேறும் ஒரு பொருளும் அதற்குப் பிரமாணங்களும்
அருளிச்செய்கிறார், ‘உலகத்திற்கு’ என்று தொடங்கியும்,
‘காரணப் பொருளே’ என்று
தொடங்கியும், ‘வேதத்தின்’ என்று தொடங்கியும்.
‘காரணம் து த்யேய:’
என்பது, சுருதி.
‘அதாதோ ப்ரஹ்ம
ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’
என்பவை, பிரஹ்ம சூத்திரம்.
1. 1 : 1, 2.
4. ‘இதனுடைய படைப்பு
அவனுக்காகக் கண்டது’ என்று மேலே அருளிச்செய்ததற்குத்
தகுதியாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘கரண களேபரங்களை’ என்று தொடங்கி.
‘இப்போது, கரண களேபரங்களைக் கொடுத்தவற்கு ஒழிய வேறு
ஒருவர்க்கு ஆள்
ஆவரோ?’ என்பது பதப்பொருளாம். கரணம் - உறுப்புகள். களேபரம் - உடல்.
|