பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உணர

226

திருவாய்மொழி - ஏழாம் பத்து

உணர்ந்தும், தான் உய்வதற்குரிய உபாயங்களைச் சிந்தித்தால், ஆச்சரியமான செயலைச் செய்த எம்பெருமானுடைய திருவடிகளை அல்லாமல் வேறு ஒன்றனைப் பற்றுவரோ?’ என்கிறார்.

    வி-கு :
சூழல் - உபாயம். சூழ்தல் - பற்றுதல். ‘ஆழ அழுந்திய ஞாலம்’ என்க. ஆற்றொழுக்காகப் பொருள் கூறலுமாம், தாழப்படாமல் - காலம் நீட்டிக்காமல். கேழல் -பன்றி. ‘உணர்ந்தும் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?’ என்க.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள மஹாவராகமாய் எடுத்துக் காத்த குணத்துக்கு?’ என்கிறார்.

    சூழல்கள் சிந்திக்கில் - 2தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில். 3தாங்கள் தாங்கள் விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில். மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ - 4பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தல் ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும் ஆச்சரியத்தையுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ? ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை - 5‘ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல். ‘பெரும்புனல் தன்னுள் ஆழ அழுந்திய பூமி’ என்னுதல். அழுந்திய ஞாலம் - அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி. தாழப்படாமல் - தரைப்படாமல்; மங்காமல். என்றது, 6‘உள்ளது கரைந்து போன

______________________________________________________________________

1. ‘கேழல் திருவுருவாயிற்று’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. உபாயம் என்னாமல், ‘சூழல்கள்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘தான்
  தன்னோடு’ என்று தொடங்கி.

3. ‘சூழல்கள்’ என்ற பன்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘தாங்கள்’ என்று
  தொடங்கி.

4. ‘கேழல் திருவுருவாயிற்று’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘மாயன்’ என்றதற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார், ‘பாதுகாக்கப்படுகின்ற’ என்று தொடங்கி.

5. ‘ஆழ’ என்பதனைப் ‘பெரும்புன’லுக்கு விசேடணமாக்கியும், ‘அழுந்திய’
  என்பதற்கு விசேடணமாக்கியும் இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘ஆழத்தையுடைத்தான’ என்று தொடங்கி.

6. ‘அழுந்தியிருக்க, ‘தாழப்படாமல்’ என்னக் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘உள்ளது’ என்று தொடங்கி.