மவர
|
236 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
மவர்கள்’ என்றபடி.
1வாய்க்கரையான சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே, ஆத்துமாவினுடைய
உண்மை ஞானம் முன்னாகப் பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள். செல்வன் தன் சீர்
அன்றிக் கற்பரோ - ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ? ‘இன்னம் சொல்லாய் சீமானை’
என்னக் கடவது அன்றோ? எல்லை இலாத பெருந்தவத்தால்-அளவு இல்லாத பெரிய தவத்தாலே. 2வரத்தைக்
கொடுத்த தேவசாதிக்கும் குடியிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது? பல மிறை செய் அல்லல்
அமரரைச் செய்யும் - தேவசாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து, துக்கத்தை
உண்டாக்குகிற இரணியனுடைய சரீரத்தை. 3மிறுக்கின் காரியம் - துக்கம்.
மல்லல் அரி
உருவாய்-மல்லல்-பெருமை. 4‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே, இரணியன் குளம்படியாம்படியாகப்
பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், இலட்சுமிநரசிம்மமாய்’
என்னலுமாம்; 5‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே
அன்றோ? 6அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ? செய்த மாயம் அறிந்துமே
- 7சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக்காலத்திலே தோற்றி, இரணியனுடைய உடலை இரு பிளவு
ஆக்கின இவ்வாச்சரியமான செயலை அறிந்தும்.
___________________________________________________________________
1. மேலே கூறியதனை விவரணம்
செய்கிறார், ‘வாய்க்கரையான’ என்று தொடங்கி.
வாய்க்கரையான -மேலெழுந்த வாரியான.
2. தவத்தின் மிகுதியை
அருளிச்செய்கிறார், ‘வரத்தைக் கொடுத்த’ என்று தொடங்கி.
3. மிறைக்கும் அல்லலுக்கும்
வேறுபாடு காட்டுகிறார், ‘மிறுக்கின் காரியம்’ என்று.
மிறுக்கு-பீடை.
4. ‘உக்ரம் வீரம்
மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஹிம்ஹம் பீஷணம்
பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’
என்பது, நரசிம். மந்.
5. ‘இலட்சுமி நரசிம்மம்’
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘நாராயணனே’ என்று
தொடங்கி.
‘நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து
ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’
இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.
6. ‘இங்கும் அவளைச்
சொல்ல வேண்டுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவளை’ என்று தொடங்கி.
7. ‘மாயமாவது
யாது?’ என்ன, ‘சிறுக்கனுடைய’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|