ப
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
10 |
243 |
பின் வரக்கூடியமான கைவல்யமாகிற
பெரிய துக்கத்தை வாசனையோடே போக்கி. 1‘முன்பு நின்ற நிலைதான் நன்று’ என்னும்படி
அன்றோ இதன் தன்மை? அதற்கு, பின்னை ஒரு சரீரத்தை எடுத்தாகிலும் பகவானை அடைவதற்குத் தகுதி
உண்டே அன்றோ? இது எப்பொழுதும் அழிந்ததே அன்றோ?
தன் தாளின் கீழ்ச்
சேர்த்து-பாதரேகைபோலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து. அவன் செய்யும் சேமத்தை எண்ணி -
2பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணிவிடுகை. ‘இவன் நினைவோடு
தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல். 3இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே,
முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’
இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை. எண்ணித்
தெளிவுற்று - இதனை எண்ணித் தெளிந்து. 6அவன் ‘என்னையே பற்று’ என்று
__________________________________________________________________
1. ‘கைவல்யம் பெருந்துன்பமாமோ?’
என்ன, ‘முன்பு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். அதனைத் தெளிவு பெற விவரணம்
செய்கிறார்,
‘அதற்கு’ என்று தொடங்கி.
2. ‘சேமம்’ என்பதற்கு,
‘மீண்டு வருதல் இல்லாதபடி செய்யும் பாதுகாவல்’ என்று
பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி.
‘இமாந் லோகாந் காமாந்நீ
காமரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு. என்பது
போன்ற பிரமாணங்களாலே மீட்சி உண்டு
என்று அறியக் கூடியதாயிருக்க, மீண்டு
வருதல் இல்லை என்னக் கூடுமோ?’ என்ற சங்கைக்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘பின்னை’ என்று தொடங்கி. ‘தன் புத்தி அதீனமாம்படி’ என்றது, ‘ஈஸ்வரனுடைய
புத்தி அதீனம்’ என்றபடி.
3. இதனால் பலித்த
பொருளை அருளிச்செய்கிறார், ‘இவன்’ என்று தொடங்கி.
வாசியறும்படி செய்தலாவது, இரண்டும் ஒரே
தன்மையாய் இருத்தல்.
4. ‘சேதநன் ஆகையாலே
இவனுக்கும் வேறு ஒரு நினைவு உண்டாகாதோ?’ என்ன,
‘இவனும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
5. ‘இவன் நினைவோடு’ என்று
தொடங்கி மேலே அருளிச்செய்த வாக்கியத்தை
விவரணம் செய்கிறார், ‘இவன்’ என்று தொடங்கி.
என்றது, ‘இவனுடைய
சுவாதந்திரியமும் அவனுடைய சங்கல்பத்துக்குத் தகுதியாகவே இருக்கும்’ என்றபடி.
6.
‘தெளிவு’ என்றதனைக் காட்டாநின்றுகொண்டு அந்வயமும் காட்டுகிறார், ‘அவன்
என்னையே’ என்று தொடங்கி.
என்றது, ‘போர்த்த பிறப்பொடு’ என்று தொடங்கி,
‘அநிஷ்ட நிவர்த்தி முன்னாக இஷ்டப்
பிராப்தியையும் செய்து தருகிறேன்’ என்று
அவன் அருளிச்செய்த சரம
|