கடவத
ஆறாந்திருவாய்மொழி -
பா. 2 |
255 |
கடவதாய் அன்றோ இருக்க
அடுப்பது? அங்ஙனம் கிரமத்திலே அடைகிறோம் என்று பார்த்து ஆறி இருக்க மாட்டுகின்றிலேன். தனியேன்
உன்னை என்று கொல் சேர்வதுவே - 1நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே?
இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ? 2‘உன்னை என்றுகொல்
சேர்வதுவே’ என்னாநிற்க, அது சேரும்படி என்?’ என்னில், 3ஒண்டொடியாள் திருமகளும்
நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கயாலே, ‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?
(1)
719
என்றுகொல் சேர்வதுஅந்
தோ!அரன்
நான்முகன்
ஏத்தும்செய்ய
நின்திருப் பாதத்தை
யான்? நிலம்
நீர்எரி
கால்விண்ணுயிர்
என்றஇவை தாம்முத
லாமுற்று
மாய்நின்ற
எந்தாயோ!
குன்றுஎடுத்து ஆநிரை
மேய்த்து அவை
காத்தஎம்
கூத்தாவோ!
பொ-ரை :
‘நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் ஆகாயமும் உயிரும் என்ற இவை முதலாக மற்றுமுள்ள எல்லாப்
பொருள்களும் உனக்குச் சரீரமாக நின்ற எந்தையே! பசுக்கூட்டங்களை மேய்த்து, மலையைத் தூக்கிப்
பிடித்து அப்பசுக்களைக் காத்த எம் கூத்தனே! சிவனும் பிரமனும் ஏத்துகின்ற நின் செய்ய திருபாதத்தை
யான் சேர்வது என்றுகொல்? அந்தோ!’ என்கிறார்.
வி-கு :
‘அந்தோ’ என்பது. இரக்கத்தைக் காட்டும் இடைச்சொல். ‘அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின்
திருப்பாதத்தை யான் சேர்வது என்றுகொல்?’ என்க. ‘எந்தை, கூத்தன்’ என்பன, விளி ஏற்றலின்
ஈறு திரிந்து ஓகாரம் பெற்றன.
_____________________________________________________________
1. ‘அவனைச் சேராதிருந்தால்
சத்தை உண்டோ?’ ‘என்றுகொல் சேர்வது?’
என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நாராயணனை’
என்று தொடங்கி.
2. சங்கிக்கிறார்,
’உன்னை’ என்று தொடங்கி. ‘அது சேரும்படி’ என்றது,
‘அடியார்களை குழாங்களை உடன் கூறுவதனைக் காட்டும்படி’
என்றபடி.
3. அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘ஒண்டொடியாள்’ என்று தொடங்கி.
என்று, ‘இவருடைய அபிமானத்திலே
இவர்கள் அடங்கினவர்களாய்
இருக்கையாலே, அவனைச் சொன்னால் இவர்களையும் தன்னடையே
சொல்லிற்றாம்,’ என்றபடி.
|