New Page 1
|
264 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
போமோ? எழில் மூன்று
1உலகும் நீயே-மூன்று உலகங்களிலே உள்ள பொருள்களின் உயர்வுகளும் உன் அதீனம். அங்கு
உயர் முக்கண்பிரான்-அந்த அண்டத்தில் மற்றைத் தேவர்களைக் காட்டிலும் சிவன் பக்கல் வந்தவாறே
ஓர் உயர்வு உண்டே அன்றோ? அந்த உயர்வு உன் அதீனம். பிரம பெருமான் அவன் நீ-அவனுக்கும் தந்தையாய்ப்
பதினான்கு உலகங்கட்கும் ஈஸ்வரனாகையாலே வருவது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ பிரமனுக்கு? அதுவும்
நீ இட்ட வழக்கு. வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ- 2‘வச்சிரத்தைக்
கையிலேயுடையவன் புரந்தரன் என்ற பெயரையுடையவன்’ என்கிறபடியே, வெவ்விய கதிரையுடைத்தான வச்சிரத்தைக்
கையிலேயுடையனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமான தேவதைகளுடைய உயர்வுகளும் நீ இட்ட வழக்கு.
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே - 3உன்னை ஒழிந்த
பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ, உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி
ஆனாய். 4தேனையுடைத்தாய் மலர்ந்த செவ்வித் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட
மயிர் முடியையுடையாய், அவ்வழகை எனக்குப் பிரகாசிப்பித்த அடியார்கட்கு அடக்கமுடையவனாய்
இருக்கிற கிருஷ்ணனே!
‘கொங்கு அலர் தண்
அம் துழாய் முடி’ என்கையாலே, இனிமையின் மிகுதி சொல்லிற்று; ‘என்னுடைக் கோவலனே!’ என்கையாலே,
அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது.
(4)
___________________________________________________________________
1. ‘உலகம்’ என்பது, உலக
மக்களைக் காட்டுகிறது. இதனை ஆகுபெயர் என்பர்
நச்சினார்க்கினியர். மக்கட்டொகுதியை உணர்த்தும்
வழியும் உரிய பெயரேயாகலின்
ஆகுபெயர் அன்று என்பர் சேனாவரையர். இங்கு, ‘எழில்’ என்ற பதத்திலே
பொருள் நோக்கு ஆகையாலே ‘மூவுலகு எழிலும் நீயே’ என மாற்றிக் கூட்டுக.
பின்னே வருகின்ற
‘உயர்’ ‘பெருமான்’, ‘வெங்கதிர் வச்சிரம்’ என்பனவற்றிற்கும்
இங்ஙனமே கொள்க.
‘வஜ்ரஹஸ்த: புரந்தர;’ என்பது,
பிருஹத் சௌத்ராமணி
‘வச்சிரத் தடக்கை அமரர்
கோமான்’
என்பது, சிலப். கட்டுரைகாதை,
அடி, 50.
3. மேலே அருளிச்செய்த
உயர்வுகளை எல்லாம் அநுவதித்துக் கொண்டு,
‘என்னுடைய’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘உன்னை’ என்று
தொடங்கி.
4. ஈற்றடியினால்
போதரும் பொருளை அருளிச்செய்கிறார், ‘தேனையுடைத்தாய்’
என்று தொடங்கி.
|