பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஆறாந்திருவாய்மொழி - பா. 6

269

குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே. ‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று; ‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று; ‘ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்’ என்கையாலே, இரண்டும் பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது. ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி 1மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச்செய்கிறார் மேல்:

    அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட - அந்தரம் - நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் திருப்பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபிகமலம், திருக்கைகள், 2பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திருமார்பு, திருக்கண்கள், திருப்பவளம் இவை, சிவந்த சுடரையுடைத்தான ஒளியை வீச. உறை என் திருமார்பனை - 3இதுவும் ஓர் ஆபரணம் போலே: என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே உடையவனை. 4திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு, அதிலே பலப்பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள, மேல் எழுந்தருளி இருக்க

______________________________________________________________________

1. ‘மறைத்துச் சொல்லிற்று’ என்றது, ‘மல்கு நீலச் சுடர்’, ‘ஒரு மாணிக்கம்’ என்கிற
  இடத்தில் உபமேயம் விளங்குவது போன்று ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்ற
  இடத்தில் உபமேயம், திவ்விய அவயவங்கள் என்று விளங்காமையாலே என்றபடி.

2. ‘திருமார்பு கரிய நிறமாய் இருக்க, அவயவங்களோடே கூட்டுவான் என்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரிய பிராட்டியார்’ என்று தொடங்கி.

3. பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியையும் ஓர் ஆபரணமாக உருவகம் செய்கிறார்,
  ‘இதுவும்’ என்று தொடங்கி.

4. ‘சேர்வது போல்’ என்றதற்குச் சேர இன்ன இடத்திலே என்ன வேண்டுகையாலே,
  அதனை அருளிச்செய்கிறார், ‘திருப்பாற் கடலிலே’ என்று தொடங்கி.