ட
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 8 |
275 |
டாரையும், முதுகு காட்டினாரையும்
கொல்லக் கூடாதே அன்றோ? ஆகையாலே, தப்பி ஓடிப் போய் ஒளிப்பாரும் உள்ளே பட்டுப்
போனாருமாய்ப் போனார்களாதலின், ‘பிலம் புக்கு ஒளிப்ப’ என்கிறார்.
மீளி அம்
புள்ளைக் கடாய்-வலியையுடைய பெரியதிருவடியை நடத்தி. மீளியம்; ஒருசொல்; வலி என்பது பொருள்.
அன்றிக்கே, ‘மீளி அம் புள்’ என்று பிரித்து, 1‘கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி’
என்கிறபடியே, பகைவர்களுக்கு யமன் போலே இருப்பானாய், 2‘தூவாய புள்ளூர்ந்து’ என்கிறபடியே,
அநுகூலர்க்குக் காண்பதற்கு இனியதான வேடத்தையுடையவனான பெரிய திருவடியை நடத்தி என்னுதல்.
3பெரிய திருவடி முதுகிலே வந்து தோற்றும் போதை அழகையே அன்றோ இவர் பாவித்துக் கிடப்பது?
4மீளி என்று வலிக்கும், யமனுக்கும், பாலை நிறத் தலைமகனுக்கும் பேராகச்
சொல்லுவர்கள். விறல் மாலியைக் கொன்று - 5ஆக, பிரசித்தர்களிலே ஒருவனைச்
சொல்லிற்று. பின்னும் ஆள் உயர் குன்றங்கள் செய்து-பின்னும் ஆண் பிள்ளைகளாய் இருப்பார்
பலரை அழியச் செய்து, அவர்களாலே பிணமலையாம்படி செய்து. ஆண்களாலே உயர்ந்த மலைகளாம்படி செய்து.
அடர்த்தானையும் காண்டுங்கொலோ- 6அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே,
நம் விரோதிகளைப் போக்கி நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக்கட்ட
வல்லோமோ?
(8)
____________________________________________________________________
1. ‘கறையணி’ என்பது,
திருவாய், 3. 10 : 2.
2. ‘தூவாய’ என்பது,
பெரியதிருமொழி, 6. 8 : 3.
3. ‘பெரிய திருவடி அடியார்கட்குக்
காட்சிக்கு இனியனோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘பெரிய திருவடி’ என்று தொடங்கி.
‘பண்கொண்ட புள்ளின்
சிறகு ஒலி பாவித்து’ (திருவாய். 3. 8 : 5) என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘இவர்
பாவித்துக் கிடப்பது’ என்கிறார்.
4. ‘மீளி’ என்பது, பல
பொருள் ஒருசொல் என்பதனைக் காட்டுகிறார் ‘மீளி’ என்று
தொடங்கி. ‘கன்னி விடலை காளை
மீளி’ என்பது, நம்பியகப்பொருள்.
5. ‘அவதாரிகையில் ‘மாலி
தொடக்கமான’ என்று அருளிச்செய்து வைத்து, இங்கு
ஒருவனைக் கொன்று என்கிறது என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘ஆக’ என்று தொடங்கி.
6. ‘அடர்த்தானையும்
காண்டுங்கொலோ!’ என்கிறவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘அவன்’ என்று தொடங்கி.
|