இன
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 10 |
281 |
இன்றிக்கே இருந்த
பின்பு அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.
ஏறஅரு வைகுந்தத்தை
அருளும் நமக்கு - ஒருவராலும் தம்முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை அவன் தானே
தரப் பெற இருக்கிற நமக்குத் தரும். 1‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து,
‘அதனைத் தரும்’ என்று இருந்தீரேயாகிலும், பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில்,
ஆயர்குலத்து ஈற்றிளம்பிள்ளை - நம்படி பார்க்க அறியாத இளைஞன். 2‘இளைஞனே!
(சிசுபாலனுக்கு) நித்தியசூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக்கடவதன்றோ? ஈற்றிளம்பிள்ளை
- 3‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு. அன்றிக்கே,
ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி. இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி. ஒன்றாய்ப்
புக்கு - 4கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட,
இவனும் பொய்யே மருகனாய் அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விருமகிப் போய்ப் புக்கானாயிற்று.
அன்றிக்கே, ‘வில்விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.
மாயங்களே இயற்றி
- ஆயுதச்சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, 5ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம்
சாத்துவது, குவலயாபீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே
செய்து. இயற்றுதல் - செய்யத்
_____________________________________________________________________
1. மேலிற்பத்துக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘எல்லாவழியாலும்’ என்று
தொடங்கி.
2. நம் குற்றத்தை அறியாதவனாக
இருப்பான் என்பதற்கு உறுப்பாக, அவன்
இளமையைச் சொல்லுகிறதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘இளைஞனே’ என்று
தொடங்கி.
‘முக்த ஸாயுஜ்யதோபூ:’
என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.
3. ‘ஈறு என்று எல்லையாய்,
‘பிள்ளைத்தனத்தில் எல்லையானவன்’ என்னுதல்;
‘ஈன்றண்ணிய பிள்ளை’ என்னுதல்’ என்பது,
இருபத்து நாலாயிரப்படி.
4. ‘ஒன்றாய்ப் புக்கு’ என்பதற்கு
இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘கம்ஸனும்’ என்றும், ‘வில்விழவு’ என்றும் தொடங்கி.
5. ஈரங்கொல்லி-வண்ணான்.
|