பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 6

29

பொ-ரை; பண்ணில் இருக்கிறவனே! கவியில் இருக்கிறவனே! பக்தியில் இருக்கிறவனே! மேலான ஈசனே! எனது கண்ணில் இருக்கிறவனே! நெஞ்சில் இருக்கிறவனே! சொல்லில் இருக்கிறவனே! நித்தியசூரிகளுக்குப் பெருமானான சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்கின்ற வைந்தேயன் முதலாயினோரையும் இந்த உலகத்திலே வருத்துகின்ற ஐம்புலன்களாகின்ற இவை என்னைப்பெற்றால் என்ன காரியத்தைச் செய்யாமாட்டா? அதற்குமேல் நீரும் கைவிட்டால் அவை என்ன செய்யமாட்டா? ஆதலால், என் தளர்த்தி தீரும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

    வி-கு: ‘செய்வாரையும்’ என்பதிலுள்ள உம்மை, உயர்வு சிறப்பு. ‘செய்வாரையும் மண்ணுள் செறும் ஐம்புலன்’ என்க. அன்றிக்கே, ‘செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா?’ என ஆற்றொழுக்காக்கொண்டு பொருள் கூறலுமாம். ‘வந்து ஒன்று சொல்லாய்’ என்று கூட்டுக.

    ஈடு: ஆறாம் பாட்டு. 1‘அறிவிற் சிறந்தாரையும் வருத்துகின்ற ஐம்பொறிகள், நீயும் கைவிட்டால் பலமற்றவனான என்னை என்படுத்தா?’ என்கிறார்.

    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்- அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அடிமை செய்வாரையும் செறும். என்றது, ‘அயர்வறும் அமரர்கள் அதிபதியாயிருக்கிற சர்வேஸ்வரனுக்குச் சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி இருக்கக் கடவரானவர்களையும் செறும்’ என்றபடி. 3‘ஒரு விசுவாமித்திரன் சுக்கிரீவன் முதலாயினோர்களைக் கண்டோம் அன்றோ? என்றது, 4ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன்

 

1. ‘மற்று நீயும் விட்டால்’ என்னுமளவும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்’ என்பதற்கு இரண்டு வகையாகப்
  பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘முமுக்ஷூக்கள்’ என்பது;
  இப்பொருளையே அருளிச்செய்கிறார், ‘அயர்வறும்’ என்று தொடங்கி. அதனை
  விவரணம் செய்கிறார், ‘என்றது’ என்று தொடங்கி.

3. ‘முமுக்ஷூக்கள் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருந்த இடமுண்டோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘ஒரு விசுவாமித்திரன்’ என்று தொடங்கி.

4. அதனை விவரணம் செய்கிறார், ‘ஞானத்தால்’ என்று தொடங்கி. இங்குக் கூறிய
  சரிதங்களை முறையே கம்பராமயணம், பாலகாண்டம், மிதிலைக்காட்சிப் படலத்தில்
  104-107 செய்யுள்களிலும், கிட்கிந்தாகாண்டம், கிட்கிந்தைப் படலத்தும் காண்க.