ப
|
292 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பிராட்டியே! அந்தப்
பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப்பெரியதாயும் எரிந்துகொண்டு இருக்கிற
நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்புமாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும், 1‘நைவதம்
ஸாந் ந மஸகாந் - பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை
அன்றோ அவருடை நிலை? ‘நன்று; அதற்கு அடி என்?’ என்ன, ‘த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில்
வைத்த மனத்தையுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர, அங்கு இவை யார்தான் அறிவார் என்றான்
அன்றோ? பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு 2ஆற்றாமை? 3அதனை
அறிகிலலே இவள். 4தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக்கொண்டு பிரிகிற
போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது? அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது?
5பின்பு அவன் பட்டது அறியாளே; ஆகையாலே, 6தாமரை நாண்மலர் போல்’ என்று
சொல்லுகிறாள்.
____________________________________________________________________
‘ஸ தவ அதர்ஸநாத்
ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம்
அந்நிநேவாக்நிபர்வத:’
என்பது, ஸ்ரீராமா. சுந். 35 :
44.
1. ‘நைவ தம்ஸாந்
நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோபநயேத் காத்ராத்
த்வத் கதேநாந்தராத்மநா’
என்பது, ஸ்ரீராமா, சுந். 36 :
42.
அதற்கு-துடைக்க அறியாமல்
இருந்ததற்கு. ‘என்றான்’ என்றது, ஸ்ரீ வால்மீகியை.
‘கன்மத்தை ஞாலத் தவர்ஆர்
உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான்
மயல்கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல்சூ டியநம்ப
னேபோல்
உன்மத்த னானான் தனைஒன்றும்
உணர்ந்தி லாதான்.’
என்பது, கம்பராமா. உருக்காட்டுப்பட.
84.
2. ‘ஆற்றாமை’ என்பதனை.
‘இப்போது தாமரை நாண்மலர்போல் என்பான் என்?’
என்ற மேல் வாக்கியத்தோடு கூட்டுக.
3. மேல் வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அதனை’ என்று தொடங்கி.
4. ‘ஆயின், பின் எதனை
அறிவாள்?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தன்னோடே’ என்று தொடங்கி. என்றது,
‘கலவிக் காலத்துச் செவ்வியைச்
சொல்லுகிறாள்’ என்றபடி. விளைநீர் அடைத்துக் கொண்டு-விளையும்படி
ஒருகாலே
நீரைத் தேக்கிக்கொண்டு; பூர்ணமாக அனுபவித்து’ என்றபடி.
5. ‘அதனை அறிகிலளே இவள்’ என்று மேலே அருளிச்செய்ததனை விவரணம்
செய்கிறார், ‘பின்பு’ என்று தொடங்கி.
|