New Page 1
|
ஏழாந்திருவாய்மொழி -
பா. 2 |
295 |
செய்யலாம் என்றோ, என்னை
மீட்கலாம் என்றோ? ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள்,
‘நலிந்து என்’ என்கிறாள். என்றது, 1‘அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து
நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.
2‘நாங்கள்
சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’
என்ன, மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் - வல்லீர்கோளாகில் இந்தச்
சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள். ஒரு கடல் அருகே அக்கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு
கொடி போலே ஆயிற்று. திருக்கண்களுக்கு அருகே திருமூக்கு இருக்கிறபடி. மாடு - அருகு. 3‘உந்நஸம்
- உயர்ந்த மூக்கையுடைய’ என்கிறபடியே ‘உயர்’ என்கிறது. 4ஒழுகு நீட்சியாலே
கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இராநின்றதாதலின்,
‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது. ‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே
‘அறியேன்’ என்கிறது. ‘முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப்போமோ? இதிலே உட்புகநின்று
அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:
ஈட்டிய வெண்ணெய்
உண்டான் திருமூக்கு - 5அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க
மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக் கொண்டியிலே பிடி உண்டு, பின்பு அதனை இல்லை செய்கைக்காக
முகத்திலே தடவிக்கொள்ளுமே;
_____________________________________________________________________
1. அதனை விவரணம் செய்கிறார்,
‘அவனுடைய’ என்று தொடங்கி.
2. ‘வல்லியோ, கொழுந்தோ
அறியேன்’ என்று அவர்கள் முன்னே ஐயப்படுதற்குக்
கருத்து, ‘இதனை நிச்சயித்துத் தரவேண்டும்’ என்பது
ஆகையாலே, அதனை
அவர்களுடைய வினாவாக அருளிச்செய்கிறார், ‘நாங்கள்’ என்று தொடங்கி.
‘தாருங்கோள்’ என்றது, ‘இந்த ஐயத்தை அறுத்துத் தருதல் பிரயோஜனம்’ என்றபடி.
3. ‘ஸூசி ஸ்மிதம்
கோமள கண்டம் உந்நஸம்
லலாட பர்யந்த விலம்பிதாலகம்’
என்பது, தோத்திரரத்தினம்,
32.
4. ‘‘வல்லியோ கொழுந்தோ’
என்பதற்கு, உரிய தர்மம் யாது?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘ஒழுகு நீட்சியாலே’
என்று தொடங்கி.
5. ‘ஈட்டிய
வெண்ணெய் உண்டான்’ என்று விசேடித்ததற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அநுகூலர்களுடைய’ என்று தொடங்கி.
கொண்டி - களவு.
|