பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அங

330

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம். உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் - 1உலப்பு இல்லனவாய்க் கொண்டு உள்ளதுமாய், வியவாய்க்கொண்டு இல்லதுமாய் இருக்கின்ற சேதந அசேதநங்களுக்கு நிர்வாஹகனாய். ‘அரசனே! எது எந்தக் காலத்திலும் வளர்தல் குறைதல் முதலிய வேறுபாடுகளை அடைவது இல்லையோ, அதுதான் வஸ்து; ‘அது எது?’ என்று ஆராயந்து பார்,’ என்கிறபடியே, அசித்து அழிந்து போவதாய் இருக்கையாலே ‘இல்லது’ என்று சொல்லலாய் இருக்கும்; ஆத்துமவஸ்து ஒரே தன்மையாக இருக்கையாலே ‘உள்ளது’ என்கிறது.

    வெள்ளம் தடம் கடலுள் விடம் நாகணைமேல் மருவி - திருப்பாற்கடலில், பிரதிகூலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி விஷத்தை உமிழா நின்றுள்ள திருவனந்தாழ்வான்மேலே பொருந்தி. 2‘ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும். பூங்கார் அரவணையான்’ என்கிறபடியே, இடம் அல்லாத இடத்திலும் அச்சத்தாலே சங்கைகொண்டு அழல் உமிழுமவன் அன்றோ? உள்ளப்பல் யோகு செய்தி -திருவுள்ளத்திலே இரட்சணசிந்தை பல செய்யாநிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று, அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு. 3இப்போது இது முன்னும்

______________________________________________________________________________

1. ‘உலப்பு இல்லனவாய்’ என்றது, ‘நாசம் இல்லாதனவாய்’ என்றபடி. இது, ‘உள்ளதும்’
  என்றதற்கு அடைமொழி. ‘வியவாய்’ என்றது, ‘அழிந்துபோவனவாய்’ என்றபடி. இது,
  ‘இல்லறம்’ என்றதற்கு அடைமொழி. ‘வியவாய்’ என்பது, ‘வீயவாய்’ என்றதன் திரிபு. வீ
  - அழிவு.

      ஒரே தன்மையவாய் இருத்தலையும், வேறுபாடும் தன்மையவாய் இருத்தலையும்
  நோக்கிச் சேதந அசேதநங்களை ‘உள்ளதும் இல்லதும்’ என்கிறார். திருவாய்மொழி.
  1, 2 : 4
வியாக். பார்க்க. இதனைப்பிரமாண முகத்தாலே விளக்குகிறார், ‘அரசனே’ என்று
  தொடங்கி.

        ‘யத்து காலாந்தரேணாபி ந அந்ய ஸம்ஜ்ஞாம் உபைதி வை
        பரிணாமாதி ஸம்பூதாம் தத்வஸ்து ந்ருப தச்ச கிம்’

என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 13 : 96.

2. அப்படி விஷத்தை உமிழுமவன் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘ஆங்காரவாரம்’
  என்று தொடங்கி. இது. நான்முகன் திருவந். 10.

3. ‘முன்னும் பின்னும் விபூதி யோகத்தைச் சொல்லாநிற்க, நடுவே உபாய சிந்தையைச்
  சொல்லுவான் என்?’ என்ன, சேதந அசேதனங்களைப் பற்றிச் சொல்லுமிடத்தில்
  உபாயசிந்தை இடைப்பிறவரலாக (பிராசங்கிகம்) வந்தது என்கிறார், ‘இப்போது’ என்று
  தொடங்கி.