என
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 4 |
359 |
எனின், என் ஆகிய தப்புதல்
இன்றித் தனைக்கவி தான் சொல்லி - என்னைக் கருவியாகக்கொண்ட கவிபாடுகிற இடத்து, என்னுடைய
சம்பந்தத்தால் வந்த குற்றமும் தட்டாதபடி கவி பாடினான். என் ஆகியே - ‘என் பக்கலிலே தானாய்’
என்றவாறு. 1இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்;
நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக்கட்டுவேன்; என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடாநிற்கச்செய்தேயும்
என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக்கட்டினான்’ என்று எம்பார்
அருளிச்செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான்
சொல்லி’ என்கிறார்.
ஒப்பு இலாத் தீவினையேனை
உய்யக்கொண்டு - என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக்காட்டிலும்
நான் எவ்வளவு புகுர நின்றேனாக; நான் முன்புற்றையிற்காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ? முற்றறிவு,
வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று, அறிவின்மை ஆற்றலின்மை
இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்; ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார் என்றபடி.
உய்யக்கொண்டு - 2‘இருக்கிறவன் என்று இவனை அதனால் அறிகிறார்கள்’ என்கிறபடியே,
நான் உஜ்ஜீவிக்கும் படி என்னைக்கைக்கொண்டு. 3செப்பமே செய்து திரிகின்ற - வஞ்சனை
பொருந்திய மனத்தையுடையேனாய் இருக்கிற என்னோடே, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான
நித்தியசூரிகளோடு பரிமாறுமாறு போலோ, என்னுடனே செவ்வையே பரிமாறினான். அன்றிக்கே,
‘எனக்குக் காப்பினைச் செய்துகொண்டு போருகிற’ என்னுதல். சீர் கண்டே -இப்படி இருக்கிற சீலம்
முதலான குணங்களை அநுசந்தித்து. அப்பனை என்று மறப்பன்?
(4)
______________________________________________________________________________
1. கூறிய பொருளுக்குச் சம்வாதம்
காட்டுகிறார், ‘இவ்விடத்தில்’ என்று தொடங்கி.
2. ‘ஸந்தம் ஏனம் ததோவிது:’
என்பது, தைத்திரீய. ஆன. 6.
3. செப்பம்
- சௌசீல்யமும், பாதுகாத்தலும்.
|