பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - பா. 8

37

ளோடு பொருந்தியுண்ணும் இன்பமானது தொடக்கித்தில் அமிர்தம் போலாம்; பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம் என்பது ‘இராஜச சுகம் என்று சொல்லப்படும்,’ என்கிறபடியே, பரிணாமத்தில் விஷமேயன்றோ? 1முடிவில் உண்டாமது முதலிலே தோன்றிற்றாகில் மேல் விழாது ஒழியலாயிற்று. பழியும் தருமத்திற்குக் கேடுமாய், மேல் நரகமானாலுப் விடப்போகாதிருத்தலின், இன்னமுது’ என்கிறது. 2சரீரத்துக்கும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் இங்ஙனே ஒரு தன்மை உண்டு; திருதராஷ்டிரனோடு ஒக்கும். ‘எங்ஙனே?’ என்னில், 3அகவாயில் தரும ருசி இன்றிக்கே இருக்கச் செய்தே, வாயாலே அனுகூலம் போலே இருக்குமவற்றைச் சொல்லாநிற்பான் அவனும். ஓர் ஐவர்-தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும். யாவரையும் மயக்க-அற்பரான மனிதர்களோடு, அளவுடையரான பிரமன் முதலான தேவர்களோடு வாசி அற அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக. நீ வைத்த-சர்வசத்தியான நீ வைத்த. 4தன்னாலே படைக்கப்பட்டது என்று அறியாமல், ‘அதிலே ஓர் இனிமை உண்டு’ என்று விருப்பத்தைச் செய்கிறான் அன்றோ பிரமனும்? முன்னம் மாயம் எல்லாம்-அநாதியான சம்சாரத்தை எல்லாம். முழு வேர் அரிந்து-வாசனையோடே போக்கி. என்னை-சம்சார பயத்தாலே பயந்திருக்கின்ற என்னை. 5செய்த அமிசத்தே திருப்தனாய் இருக்குமன்றோ அவன்? ‘ஞானலாபம்

__________________________________________________________________________

1. மேலே கூறியதனை விவரணம் செய்கிறார், ‘முடிவில்’ என்று தொடங்கி.

2. ‘பிரகிருதிக்கும் பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் உள்ள சுபாவம் இது’
  என்னுமதனைத் திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார், ‘சரீரத்துக்கும்’ என்று
  தொடங்கி.

3. அகவாயில்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் பொருளை வில்லி பாரதம்
  சூதுபோர்ச்சருக்கம் 126 முதல் 133 முடியவுள்ள செய்யுள்களைப் படித்து
  அறிதல் தகும்.

4. ‘பிரமனும் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டவனானான்’ என்பதனை அருளிச்செய்கிறார்,
  ‘தன்னாலே’ என்று தொடங்கி.

5. ‘முழுவேர் அரிந்து கைதொழவே அருள்’ என்பது என்? முற்றறிவினனான
  சர்வேஸ்வரன் அறியானோ?’ என்னில், ‘செய்த அமிசத்தே’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். அதனை விவரணம் செய்கிறார், ‘ஞானலாபம்’ என்று
  தொடங்கி.