பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

க

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 9

373

காலன்காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ? இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ - 1‘எல்லாச் சேதநர்களுடையவும் வாக்கு முதலான கருவிகளையும் அனுபவித்தல் முதலான சத்திகளையும் நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை. ‘எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?’ என்ன வேண்டாதே, அவ்வவர்களுடைய உபகரணங்களையுமுடையேனாய், போன காலமும் மேல் வரக்கூடிய காலமும் எல்லாம் அனுபவியாநின்றாலுந்தான் ஆர்வனோ?

    ‘எல்லாருடைய உபகரணங்களையும் கொண்டு காலம் எல்லாம் அனுபவித்தாலும் நீர் ஆராது ஒழிகிறது அவன் செய்த எந்த உபகாரத்தை நினைத்து?’ என்ன. அருளிச்செய்கிறார் மேல்: மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப் பல இன்கவி சொன்ன உதவிக்கு - மறப்பு இல்லையான என்னை. 2மறப்புக்கு முன் கணத்தில் நிகழக்கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக, ‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச்செய்கிறார் 3‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது? 4ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் ன்றபடி. மறப்பு இலா என்னைத் தன்னாக்கி - ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய், அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ? முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி. என்னால் - ‘மறந்தேன் உன்னை முன்னம்’ என்கிற அநுதாபமுங்கூட

____________________________________________________________________________

1. மேல் இரண்டு திருப்பாசுரங்களில் கூறிய பொருளையும் கூட்டிக் கொண்டு
  அருளிச்செய்கிறார், ‘எல்லாச் சேதநர்களுடையவும்’ என்று தொடங்கி.

2. ‘‘மறப்பு இலா’ என்ற முற்றறிவுடைமை சொல்லுகிறாரோ?’ என்ன, ‘அன்று’ என்று
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மறப்புக்கு’ என்று தொடங்கி.

3. ‘‘மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என் என்னில்’ என்றது, ‘நினைவு இல்லாத’ என்ன
  வேண்டியிருக்க, ‘மறப்பிலா’ என்ன வேண்டுவான் என் என்னில். என்றபடி.

4. அதனை விவரணம் செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.

5. ‘மறந்தேன்’ என்பது, பெரிய திருமொழி, 6. 2 : 2.