பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பத்தாந்திருவாய்மொழி - பா. 1

391

திருவாறன்விளை - 1‘பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருப்பதாய், அவன் தனக்கும் உலகத்துள்ளார்க்கும் இருந்து திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய். காட்சிக்கு இனியதாய் இருக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையை. 2‘அதனால் அந்த மக்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்’ என்கிறபடியே, அவனுக்கு உத்தேசியமான இடமும் இவனுக்கு உத்தேசியமாகக் கடவது அன்றோ? அன்புற்று - ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தக்கதான தேசம் பெற்றோம்’ என்று அவன் விருப்பத்தை வைத்தாற்போலே, ‘திருவாய்மொழி கேட்பிக்கைக்குத் தக்கதாய் இருப்பது ஒரு தேசத்தைப் பெறுவோமே!’ என்று அத்தேசத்திலே விருப்பத்தை வைத்து. அமர்ந்து - அத்தேச வாசத்துக்கு அப்பால் ஒரு பிரயோஜத்தை விரும்பாமல். வலஞ்செய்து - வலம் வருதல் முதலானவற்றைச் செய்து. கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ - 3‘அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார். ‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார்போலே, 4இந்த எண்ணத்திற்கு அடைத்த  காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.

(1)

_______________________________________________________________

1. ‘அணிபொழில் திருவாறன்வினை’ என்று அடை கொடுத்து ஓதியதற்குக்
  கருத்து அருளிச்செய்கிறார், ‘பிராப்பிய பூமி’ என்று தொடங்கி.

2. நான்காம் அடியிலுள்ள ‘அன்புற்று’ என்றதற்கு, அவதாரிகை
  அருளிச்செய்கிறார், ‘அதனால்’ என்று தொடங்கி.

    ‘ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
     சதுர்ணாம் ஹி வயஸ்தாநாம் தேநதே தம் அநுவ்ரதா:’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15..

3. ‘ஆகுங்கொல்’ என்பதற்கு, ‘இப்போது ஆகுங்கொல்’ என்று பொருள்
  அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, ‘இப்படிச் சொன்ன பேர் உளரோ?’
  என்ற சங்கைக்கு உளர் என்று பரிஹாரம் அருளிச்செய்கிறார், ‘அந்தக்
  காலம்’ என்று தொடங்கி.

    ‘அபீதாநீம் ஸகால: ஸ்யாத் வநாத் ப்ரத்யாகதம் புந:
     யத்த்வா புத்ரக பஸ்யேயம் ஜடாமண்டல தாரிணம்’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 24 : 37.

   
இந்தச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘போய் வருகை’
  என்று தொடங்கி.

4. திருஷ்டாந்தத்திலே சொன்ன அர்த்தத்தைத் தார்ஷ்டாந்திகத்திலே
  பொருத்திக் காட்டுகிறார், ‘இந்த எண்ணத்திற்கு’ என்று தொடங்கி.