ய
|
40 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
யாய், வலியனவாந்,
கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புலன்களாகிற குழிகளிலே தள்ளுகின்றனவான இந்திரியங்களை. 1‘செய்யக்கூடியன
அல்லாதனவாய், சொல்லுகிற பலத்தின் அளவல்லாத அபாயங்களையுடையனவாய், குலத்தை முதலற முடிக்கக்
கூடியனவான செயல்களிலே, உன் போல்வராயுள்ள அறிஞர்கள் செல்லார்கள் காண்!’ என்றான் அன்றோ
மால்யவான், இராவணனுக்கு?
வலமுதல் கெடுக்கும்
வரமே தந்தருள் கண்டாய்-இவற்றினுடைய வலிமையை முதலிலே வாராதபடி முடிக்கக்கூடியதான உன்னுடைய திருவருளைச்
செய்தருள வேணும். ‘நம்மாலே தனியே இங்ஙனே செய்யலாயிருக்குமோ?’ என்ன, நிலம் முதல் எவ்வுலகுக்கும்
நிற்பன செல்வன எனப் பொருள் பல முதல் படைத்தாய்- 2‘நீ, உலகத்தைப் படைத்தல்
முதலாயினவற்றைச் செய்கிற போது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்?’ என்கிறார். அன்றிக்கே,
3‘படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் அன்றோ? அது பெற வேண்டாவோ?’ என்னலுமாம். பூமி
முதலாக மற்றும் இப்படி உண்டான எல்லா உலகங்களிலும் தாவர ஜங்கமங்களாகிற பல பொருள்களையும்
முன்பே உண்டாக்கினாய். என் கண்ணா என் பரஞ்சுடரே-அப்படிப் பொதுவான காத்தல் ஒழிய, கிருஷ்ணனாய்
வந்து அவதரித்து எனக்கு பவ்யனாய், வடிவழகினை எனக்கு உபகரித்தவனே! 4ஒரு நாடாக
அனுபவிக்கும் வடிவழகினை என்னை ஒருவனையும் அனுபவித்தவனே! 5அழிந்த உலகத்தை உண்டாக்கின
உனக்கு, உள்ளதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?
(9)
____________________________________________________________________
1. விஷயங்களிலே ஈடுபாடு குலத்தை
அடியோடு அழித்துவிடும் என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘செய்யக்கூடியன அல்லாதனவாய்’ என்று
தொடங்கி.
‘நஹி தர்மவிருத்தேஷூ பஹ்வபாயேஷூ
கர்மஸூ
மூலகா திஷூ ஸஜ்ஜந்தே புத்திமந்தோ
பவத்விதா:’
என்பது, ஸ்ரீராமா. யுத்.
2. உலக சிருஷ்டியைச்
சொல்லுவதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நீ, உலகத்தை’
என்று தொடங்கி.
3. மேலதற்கே வேறும் ஒரு
பாவம் அருளிச்செய்கிறார், ‘படைத்தலுக்கு’ என்று
தொடங்கி.
4. ‘என் பரஞ்சுடரே’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒரு நாடாக’
என்று தொடங்கி.
5. ‘நிலமுதல்
. . . . . . படைத்தாய்’ என்பதற்கு, அருளிச்செய்த இருவகைக்
கருத்துகளுள், முதல் கருத்தினை விவரணம்
செய்கிறார், ‘அழிந்த உலகத்தை’
என்று தொடங்கி.
|