பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

பத்தாந்திருவாய்மொழி - பா. 6

403

முடுகி இருக்கிற அன்று. அங்கு - இவன் விரையாநின்றான், உடையவன் வந்து கைக்கொள்ளானோ என்று இருக்கிற அளவிலே, தூணிலே தோற்றினாற்போலே தோற்றினான் ஆயிற்று. அமர் வென்று - அவளுக்காக மார்விலே அம்பு ஏற்று. உருப்பிணி நங்கை - எல்லாம் படவேண்டும்படி ஆத்தும குணங்களாலே நிறைந்தவளாய் இருக்கும்படி. அணி நெடுந்தோள் புணர்ந்தான் - தனக்குத்தானே ஆபரணமாய், இனிமை அளவு இறந்துள்ள தோள்களோடே கலந்தவன். இதனால், ‘விரும்பினவர்கள் விரும்பும் சமயத்திலே வந்து தோன்றுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் - எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் என்னுடைய மனமானது துதிக்கும்படி என் நெஞ்சிலே இருக்கிற உபகாரகன். 1உருக்குமிணிப்பிராட்டியினுடைய கல்யாண குணங்களேகாணும் இவர் நெஞ்சிலே பட்டுக் கிடப்பன. நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது - 2பிரகாசியாநிற்கச்செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே, ‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந்தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிற அழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை. உள்ளித் தொழுமின் தொண்டீர்! - 3‘தாம் அடிமை செய்ய நினைக்கிறாகில் ‘உள்ளித் தொழுமின்’ என்கிற பரோபதேசத்துக்குக் கருத்து என்?’ என்னில், இவர்க்குச் சுவானுபவந்தான் பரோபதேசத்தை ஒழிந்து இராது; 4நெஞ்சினை விளித்ததோடு ‘தொண்டீர்’ என்றதனோடு வாசி இல்லை.

(6)

______________________________________________________________

1. ‘தோள் புணர்ந்தான், உள்ளே இருக்கின்ற’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘உருக்குமிணிப் பிராட்டியினுடைய’ என்று தொடங்கி.

2. ‘நின்ற’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பிரகாசியா
  நிற்கச்செய்தேயும்’ என்று தொடங்கி.

3. ‘மனோரதிக்கும் இவ்விடத்தில் பரோபதேசம் பொருந்தும்படி யாங்ஙனம்?’
  என்று சங்கித்துப் பரிகரிக்கிறார், ‘தாம் அடிமை செய்ய’ என்று தொடங்கி.

4. ‘ஆனால், ‘என் மனனே’ என்றது போன்று, தம் திருவுள்ளத்துக்கு
  அருளிச்செய்தாலோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘நெஞ்சினை’ என்று தொடங்கி.