பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வளர

பத்தாந்திருவாய்மொழி - பா. 7

405

வளர்சிக்கு உடலாய் வருமவையெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல், ஆகையாலே, பிராப்பிய பூமி அந்தத் தேசமே; அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்; இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

    நீள் நகரம் அதுவே - 1கலங்காப் பெருநகரமாய், புக்கார்க்கு ‘மீண்டு வருதல் இல்லை’ என்கிறபடியே ஒரு நாளும் மீட்சி இல்லாதபடி எப்பொழுதும் அனுபவம் பண்ணும் பிராப்பிய தேசம் அதுவே. மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் - 2‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று. நித்திய வசந்தமான பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையாகிற மஹா நகரத்திலே வந்து வசிக்கின்ற உபகாரன். நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் வாணபுரம் புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து - 3அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து, சம்சாரத்தில் தன்பக்கல் ருசியுடையரானவர்கள் பக்கல் வியாமோகத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து, ஒரு கடலினின்றும் ஒரு கடலிலே எடுத்துவிட்டு, 4ஈஸ்வரன் என்ற எண்ணமுடையவனாய்

________________________________________________________________

எல்லை பகவத் கைங்கரியமாய், அந்தப் பகவத் கைங்கரியத்திற்குக்
காரணமாகையாலே, அதற்குத் சரமாவதி தேசமாக இருக்கிறது,’ என்றபடி.
சாதனத்தாலே சாதித்துக்கொள்வது எதுவோ, அது சாத்தியம்,. ‘கடகன்’
என்றது, ‘உபாயம்’ என்றபடி.

1. திருவாறன்விளையே பிராப்பியம் என்னுமதற்கு வாசகம், ‘நீள் நகரம்’
  என்கிற இது என்னும் இடம் தோற்ற அருளிச்செய்கிறார், ‘கலங்காப்
  பெருநகரம்’ என்று தொடங்கி. கலங்காப் பெருநகரம் - பரமபதம்.
  ‘அதுவே’ என்றது, திருவாறன்விளையை.

2. ‘உறைகின்ற’ என்றதனைக் கடாட்சித்து பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘அவனுக்கும்’ என்று தொடங்கி.

3. ‘விண்ணவர்கோன் நெடுமால் கண்ணன்’ என்று கூட்டிப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘அயர்வறும் அமரர்கள்’ என்று தொடங்கி. ‘ஒரு
  கடலினின்றும் ஒரு கடலிலே எடுத்துவிட்டு’ என்றது, துவாரகை
  மேலைக் கடலிலேயும், சோணிதபுரம் கீழைக்கடற்கரையிலேயும்
  உள்ளன ஆகையாலே அதனைத் திருவுள்ளம் பற்றி என்க.

4. ‘முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து’ என்றதற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார், ‘ஈஸ்வரன்’ என்று தொடங்கி. இவன்
  வாணாசுரன்.