பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

432

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே. ப. 294.

    யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே. பக். 304.

    பிரளயம் கோத்தாற்போலே. பக். 318.

    ஒன்றைக் கேட்க வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே. பக். 321.

    ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக் கொடுத்தாற்போலே. பக். 344.

    திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே. பக். 349.

    தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே. பக். 353.

    திருமஞ்சனத்திற்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே. பக். 362.

    தந்தையானவன் மகனுக்கு ஒரு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து மீண்டு அவன் பக்கலிலே பசுவை நீர் ஏற்றுப் பெருமாறு போலே. பக். 366.

    ஸ்ரீ வால்மீகி பகவான் பாடின ஸ்ரீ ராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே திருதம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே. பக். 384.

    சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே. பக். 388.

    பல முதலிகள் இருக்க ஆழ்வானைக் கொடுத்தாற்போலே. பக். 400.

    பால் குடிக்க நோய் தீருமாறு போலே. பக். 401.

    இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே. பக். 389.

    குழந்தை பால் குடிகைக்கண்டு உகக்கும் தாயைப் போலே. பக். 390.

    ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே. பக். 406.

    முட்பாய்ந்தால் ‘அம்மே!’ என்பாரைப் போலே. பக். 410.

    இராசபுத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால், கைக்கூட்டனுக்கும் பாலும் சோறும் இடுவாரைப் போலே. பக். 111.

   
‘பருவம் அல்லாத காலங்களில் கடல் தீண்டலாகாது’ என்றாற்போலே.
பக். 419.