பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இரண

இரண்டாந்திருவாய்மொழி-‘கங்குலும்’

முன்னுரை

ஈடு: 1‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில், ‘நம:’ என்ற சொல்லின் பொருள் பல வகையாலும், ‘தொண்டர் தொண்டர் தொண்டன் தொண்டர் சடகோபன்’ என்று ததீய சேஷத்துவ பரியந்தமாக உள்ளபடி அநுசந்தித்தாராயற்றது. 2‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழியில், பெரியபிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்; ‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே தன் பக்கலினின்றும் நம்மை அகற்றப் பார்த்தானே அன்றோ?’ என்று கூப்பிட்டார் ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில். 3பலத்தோடே கூடியுள்ளதாயும், காலதாமதம் இன்றிப் பலிக்கக் கூடியதாயும் இருக்கிற சாதனத்தைப் பற்றின பின்பும் அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க்கொண்டு

____________________________________________________________________

1. ‘உண்ணிலாவிய’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து ‘உலகமுண்ட
  பெருவாயா!’ என்ற திருவாய்மொழியில் ‘புகல் ஒன்று இல்லா அடியேன்’
  என்கையாலே, திருமந்திரத்தில் பிரணவத்தின் பொருள் சொல்லப்பட்டது;
  ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில், பிரணவத்தின் அடுத்த பதமான ‘நம;’
  என்றதன் பொருள் சொல்லப்பட்டது; இத்திருவாய்மொழியில், அதற்கு அடுத்த
  பதமான ‘நாராயணாய’ என்றதன் பொருள் சொல்லப்படுகிறது என்பது. ‘நன்று;
  இத்திருவாய்மொழியில் ‘நாராயணாய’ என்ற சொல்லின் பொருள் சொல்லப்படுபாறு
  யாங்ஙனம்?’ எனின், ‘ஆய’ என்ற நான்காம் வேற்றுமையின் பொருள்
  கைங்கரியமாகையாலும், அந்தக் கைங்கரியந்தான் அனுபவத்தால் உண்டாகும்
  பிரீதியின் காரியமாதலாலும், அந்த அனுபவந்தான் பிராவண்யத்தின் காரியமாதலாலும்,
  அந்தப் பிராவண்யமே இத்திருவாய்மொழியில் சொல்லப்படுதலால் என்க.

2. இத்திருவாய்மொழிக்குச் சங்கதி அருளிச்செய்வதற்குத் திருவுள்ளம் பற்றி, மேல்
  இரண்டு திருவாய்மொழிகளிலும் அருளிச்செய்த பொருளை அனுவதிக்கிறார்,
  ‘உலகமுண்ட’ என்று தொடங்கி.

3. ‘ஒரு சாதனத்தைச் செய்தவர்கள் பலம் சித்தியாகுமளவும் ஆறியிருக்குமாறு போலே
  ஆறியிராமல் கூப்பிடுவான் என்?’ என்ன. ‘பலத்ததோடே’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்’ ‘சித்தசாதனமாகையாலே இரண்டும் இல்லை,’ என்றபடி.