பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

50

திருவாய்மொழி - ஏழாம் பத்து

சொல்லியன்றோ கூப்பிட்டது? அவற்றுள், பரத்துவம் வேறு உலகம் ஆகையாலே, ‘கிட்டப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்; அவதாரம் வேறு காலமாகையாலே, ‘அக்காலத்தில் உதவப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்; உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை, 1தான் அறிந்து செய்யுமது ஆகையாலே, ‘நம்மால் செய்யாலாவது இல்லை’ என்று கொண்டு ஆறியிருக்கலாம்; அந்த இழவுகள் எல்லாம் தீரும்படி எப்பொழுதும் அண்மையிலிருந்து கொண்டு கோயிலிலே திருக்கண்வளர்ந்தருளகிற பெரிய பெருமாள் திருவடிகளிலே விழுந்து தாம் விரும்பியவை பெறாவிட்டால் தரிக்க ஒண்ணாதே அன்றோ? 2விஷயம் அண்மையில் இல்லாமலிருத்தல், ஞானத்திலே சொத்தை உண்டாதல் செய்யிலன்றோ? தரித்திருக்கலாவது? 3நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல், மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கின்றார் அன்றோ?

    4
இப்படி இருக்கச்செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய் ஒரு பிராட்டி நிலையை அடைந்தாராய் அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற நிலையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாமல், திருத்தாயார் கூப்பிடும் படியாய் விழுந்தது. 5கலவியிலும் பிரிவிலும் பிறக்கும் லாபாலாபங்

__________________________________________________________________

1. ‘தான் அறிந்து செய்யுமதாகையாலே’ என்றது, இவர் அசித்தோடு
  வேறுபாடில்லாதவராய்க் கிடக்க, ஒரு கால விசேடத்தில் தான் அறிந்து
  செய்யுமதாகையாலே என்றபடி.

2. தாம் விரும்பினவை இங்குக் கிடையாவிட்டால் தரித்திருக்கப் போகாமைக்குக்
  காரணத்தை அருளிச்செய்கிறார், ‘விஷயம்’ என்று தொடங்கி. ‘ஞானத்தில்’ என்றது,
  ‘ஈஸ்வரனுடைய ஞானம் சத்தி முதலியவைகளில்’ என்றபடி.

3. மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார், ‘நீர்மையில்’ என்று தொடங்கி. ‘மேன்மை’
  என்றது, ஞானம் சத்தி முதலியவைகளால் நிறைந்திருத்தல்.

4. இப்படி, மேன்மை நீர்மைகள் இரண்டும் குறைவற்றிருக்கிறவிடத்திலும் விரும்பியவை
  கிடையாமையாலே வந்து ஆற்றாமையின் கனத்தை அருளிச்செய்கிறார், ‘இப்படி
  இருக்கச்செய்தேயும்’ என்று தொடங்கி.

5. ‘பிராட்டியின் நிலையும் திருத்தாயார் நிலையும் ஒரே காலத்தில் உண்டாகில்,
  இவருடைய
பிராவண்யம் குறையாதோ?’ என்கிற சங்கையை அநுவதித்துப்
  பரிகரிக்கிறார், ‘கலவியிலும்’ என்று தொடங்கி. என்றது, ‘தாயாராயும் பேசலாம்;
  பேரவாவுக்கும் குறைவில்லை,’ என்றபடி.