வ
|
54 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
வியசனம் மாற்றுகைக்காக
‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ? அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை;
1இரவில் விஷயலாபத்தாலே போது போக்கவும், பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே
கொடுபுக்கு மூட்டி, ‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும்
ஆமன்றோ? 2‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே, இவளுக்கு
அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே. ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து
வைத்த இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள். 3பகலும் இரவோடு ஒக்க உறங்கக்
கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின், ‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை
கொடுக்கையாலே உறக்கம் இல்லை; அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது
இல்லை’ என்றபடி. 4‘பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,’
என்கிறபடியே, இவளையும் தன் படி ஆக்கினான். என்றது, 5‘மேலான ஒப்புமையை அடைகிறான்’
என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி. கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில்
விரஹநோய் உறங்க ஒட்டாது; ஆகையாலே, இவளுக்கு இரண்டுபடியாலும் உறக்கம் இல்லாமையாலே ‘கண்
துயில் கொள்ளாள்’ என்னாமல், ‘கண்
___________________________________________________________________
1. ‘வியசனம் ஆறும் பிரகாரம்
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இரவில்’ என்று தொடங்கி.
2. ‘இவளுக்கு அப்படிப்
போது போக்க ஒண்ணாதோ?’ என்ன, ‘எங்ஙனே தரிக்கேன்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘‘பகலும் கண்துயில்
அறியான்’ என்பது என்? பகலில் உறங்குவது உண்டோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பகலும்’ என்று தொடங்கி. ‘அலை
கொடுக்கையாலே’ என்றது. ‘கலவிக்கு இடம் கொடுக்கையாலே’ என்றபடி.
‘அலை’
என்பது செயலாய், கலவியைச் சொல்லுகிறது.
4. அதனால் பலித்த
பொருளை அருளிச்செய்கிறார், ‘பெருமாள்’ என்று தொடங்கி.
‘அநித்ர: ஸததம் ராம:’
என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44.
5. ‘பரமம் ஸாம்யம் உபைதி’
என்பது, முண்டகோபநிடதம்.
|