New Page 1
|
56 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
வேணும்’ என்று கண்ணநீரை
மாற்றப் பாராநின்றாள். 1‘இது என்ன சாகஸந்தான்! இது, தன்னால் இயலும் என்று தொடங்கினாளோ.
கடல் கொண்ட கண்ணீர் அன்றோ? 2கோகுள் இலையைக்கொண்டு கடலை வற்ற இறைப்பதாக
நினைப்பாளே! 3‘தேவரீர் கண்களிலிருந்து சோகத்தால் உண்டான நீர் எதற்காகப்
பெருகுகிறது?’ என்னும்படி காணும் இருக்கிறது. சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்- 4கண்ணநீரை
மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையாநின்றாள். 5‘தவள ஒண்சங்கு
சக்கரம்’ என்று திவ்விய ஆயுதங்களோடு காண அன்றோ இவள்தான் ஆசைப்பட்டிருப்பது! 6உகவாத
கம்ஸன் முதலாயினோர்களுக்கு அன்றோ
__________________________________________________________________
1. ‘கைகளால் இறைக்கும்’ என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
‘இது என்ன’ என்று தொடங்கி. இதனை விவரணம்
செய்கிறார்,’இது, தன்னால்’
என்று தொடங்கி. ‘கடல் கொண்ட’ என்பது, திருவிருத்தம், 18.
கடல் கொண்ட
-கடலோடு ஒத்த.
2. ‘கையால் இறைக்கிறது
சாஹஸமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘கோகுள்’ என்று தொடங்கி. கோகுள்-ஒரு
வகை மரம்.
3. ‘கண்ணநீர் கைகளால்
இறைக்கும்’ என்பதற்குக் கணக்கில்லாமல் மேலும் மேலும்
பெருகிக்கோண்டேயிருப்பதனாலே இறைக்க
முடியாது என்று மேலே பொருள்
அருளிச்செய்தார். ‘கண்ணநீர் போக்கியமாக இருக்க, எதற்காக இறைக்க
வேண்டும்?’
என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘தேவரீர்’ என்று தொடங்கி,
‘கிமர்த்தம்
தவ நேத்ராப்யாம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 4. இது பிராட்டியைப்
பார்த்துத் திருவடி கூறியது.
4. ‘கண்ணநீர் கைகளால்
இறைக்கும்’ என்றதன் பின் ‘சங்கு சக்கரங்’களைக்
கூறுவதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘கண்ணநீரை’ என்று தொடங்கி.
5. ‘தாமரைத் தடங்கண்’
என்பது போலே அவயங்களைக் கூறாமல் திவ்விய
ஆயுதங்களைக் கூறியதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘தவள ஓண்சங்கு’ என்று
தொடங்கி. இது, திருவாய்மொழி, 6. 5:1.
6. ‘பெரிய பெருமாள் இரண்டு
தோளராய் அன்றோ இருக்கிறார்? அவர்க்குச் சங்கு
சக்கரங்கள் உண்டோ?’ என்ன, ‘உகவாத’ என்று
தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘தேநைவ ரூபேண சதுர்ப் புஜேந’ என்பது, ஸ்ரீகீதை,
11.46.
‘கையி னார்சுரி சங்குஅனல்
ஆழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார்
கமழ்நீள் முடிஎம்
ஐயனார் அணியரங்கனார்
அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்
சிந்தை கவர்ந்ததுவே.’
என்பது, அநுசந்தேயம். (
அமலனாதிபிரான்.7.)
|