ம
|
58 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
மாட்டார்கள்’ என்னுமிடம்
நீரே அறிய வேண்டாவோ? 1உன்னைக் கண்ணாடிப் புறத்திலேயும் கண்டு அறியாயோ? கண்டாயாகில்
பிரியாய்; பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி. ‘எங்ஙனே தரிக்கேன்?’ என்ற உடனே வரக்காணாமையாலே,
இருநிலம் 2கைதுழா இருக்கும் - பெரிய நிரமானது ஒரு பீங்கானுக்கு உட்பட்ட சந்தனக்குழம்பு
பட்டது படாநின்றது.
செங்கயல் - 3அவ்வூரில் வசிக்கிற திரியக்குகளின்
தன்மை இவளுக்கு அரிதாவதே! அவை தம் நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள்.
4நாரத்தைப் பற்றினது களித்து வாழா நின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே?
செங்கயல் - 5அழகிய கயல். அக்கயல் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள்
உன்னை விட்டுத் தரிக்க வல்லது? ‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்று கணநேரமே
பிழைத்திருப்போம்’ என்னக்கடவதன்றோ இவளையும்? இவள் திறத்து - 6‘சரீரங்களைப்
பார்க்க வேண்டும் எழுந்தருள வேண்டும்’ என்னுமாறு போலே,
_____________________________________________________________________
1. வைலக்ஷண்யம் - கண்ணழகு.
‘இது நமக்குத் தெரியுமோ?’ என்ன, ‘உன்னை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘கண்டால் என்செய்வோம்?’ என்ன,
‘கண்டாயாகில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
கண்டாயாகில்
-கண்ணாடிப்புறத்தில் கண்டாயாகில், பிரியாய் - கண்ணாடியைப் பிரியாய் என்றபடி.
2. கைதுழா இருக்கும்-கையாலே
துழாவி, பின் அச்செயலுக்கும் சக்தையன்றிக்கே வாளா
இருக்கும்.
3. ‘செங்கயல்’ என்று,
கயலிலுடைய நிறத்தைச் சொல்லுகிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘அவ்வூரில்’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
‘அவைதம் நிறம்’ என்று தொடங்கி.
4. ‘பாய் நீர்’ என்றதற்கு
கருத்து அருளிச்செய்கிறார், ‘நாரத்தை’ என்று தொடங்கி.
நாரம்-தண்ணீர்.
5. ‘செங்கயல்’ என்றதற்கு வேறும்
ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘அழகிய கயல்’
என்று தொடங்கி. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘தண்ணீரினின்றும்’ என்று
தொடங்கி.
‘ஜலாத் மத்ஸ்யா விவோத்த்ருதௌ’
என்பது, ஸ்ரீராமா, அயோத். 53:31.
இது பெருமாளை நோக்கி இளையபெருமாள்
கூறியது.
6. இவள்
ஆற்றாமை இன்னபடிப்பட்டது என்னாமல், ‘இவள் திறத்து’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார்,
‘சரீரங்களை’ என்று தொடங்கி. ‘ஏஹி பஸ்ய ஸரீராணி’
என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 6:16. இது
பெருமாளைச் சரணாகதி அடைந்த முனிவர்
கூற்று.
|