பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இ

70

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இருக்கை. திண்கொடி மதிள்சூழ் திருவரங்காத்தாய் - ‘அவதார காலத்தில் உதவிற்றிலீரே!’ என்ன, 1அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்க அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று? 2உகந்தார்க்குக் காட்சி கொடுக்கக் கொடி கட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது? திண்ணிய மதிள் என்னுதல் - திண்ணிய கொடி என்னுதல்; அவழித்துக் கட்டாத கொடி என்கை. வருவார் எல்லாரும் வாருங்கோள்’ என்று கட்டின கொடி. இவள் திறத்து என் செய்திட்டாயே- 3இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்? 4அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’ 5மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரந் தான்கொலோ!’ என்கிறபடியே, தன் முகத்தைக் காட்டுகை அன்றோ அவன் மருந்து இடுகையாவது? இவள் கேட்கிறது என்?’ என்னில், அதுவாகில் அதற்கு மாற்றுச் செயலாக, 6மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாகவுள்ள எம்பெருமானும் சீதாபிராட்டியினுடைய ஒரு அமிசத்திற்கும் ஒப்பாகமாட்டார்கள்,’ என்று சொல்லப்படுகிற இவளை அவன் முன்னே நிறுத்தி, இவள் பட்டன எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள்.

(3)

_____________________________________________________________________

1. ‘திருவரங்கத்தாய்? என்றதனைக் கடாட்சித்து அருளிச்செய்கிறார், ‘அவதார காலத்தில்’
  என்று தொடங்கி.

2. கொடியைச் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உகந்தார்க்கு’ என்று தொடங்கி.

3. ‘இட்டாய்’ என்றதற்கு, ஸ்வாரஸ்யமாகப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இவள் இப்படி’
  என்று தொடங்கி.

4. அவன் செய்தபடியை அருளிச்செய்கிறார், ‘அவன் இவள்’ என்று தொடங்கி. ‘ஒரு
  முகத்தாலே’ என்றது, சிலேடை.

5. அவன் முகம் மருந்து என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘மையல் ஏற்றி’ என்று,
  இது, நாய்ச்சியார் திருமொழி, 2:4.

6.    ‘த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’

என்பது, ஸ்ரீராமா. சுந்.16:14.