பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

இரண்டாந்திருவாய்மொழி - பா. 5

77

என்னுதல். ஆங்கே-அந்த நிலையிலேயே மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்கிற மயங்கும் - குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாய் என்று சொல்லி, அச்சொல்லோடே அறிவு கெடும்.

    ‘நினைத்த போதாத வராப்போமோ?’ என்ன, அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே - அவன் வரத்துக்கு மாறுபட்டதாய் இருப்பது ஒரு காலத்திலே, அசுரத்தன்மை வாய்ந்த இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து போகட்டிலையோ? 1‘எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாயின; எல்லாப்பொருள்களும் நானே’ என்று தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது? அறிவு கெடுவார்க்கு உதவலாகாதோ? 2தமப்பன் பகையானாலோ உதவலாவது? நீர் பகையானால் உதவலாகாதோ? 3இவ்வளவில் உதவாமைக்கு மேற்படப் பகை இல்லை அன்றோ? 4அது ஒருகால் சிறுக்கனுக்கு உதவின்மை உண்டு; அது தப்பியதே அன்றோ?’ என்ன, பின்போ நீ உதவாதது? அலைகடல் கடைந்த - வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்றவர்களுக்கும் அகப்படக் கடலைக் கடைந்து கொடுத்திலையோ? 5உன்னைக்கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது? உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ? ஆர் அமுதே ‑ 6இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து. சந்தித்து

__________________________________________________________________

1. ‘அவுணன் உடல் இடந்தானே’ என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘எல்லாப் பொருள்களும்’ என்று தொடங்கி. ‘மத்த: ஸர்வம் அஹம் ஸர்வம்’ என்பது,
  விஷ்ணு புரா. 1. 19:85.

2. ‘அவுணன் உடல் இடந்தானே’ என்கிறவளுடைய மனோபாவத்தை வேறு ஒரு
  வகையாலும் அருளிச்செய்கிறார், ‘தமப்பன்’ என்று தொடங்கி.

3. ‘ஆயின், சர்வேஸ்வரன் இவளுக்குப் பகையோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவ்வளவில்’ என்று தொடங்கி.

4. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘அது ஒருகால்’ என்று தொடங்கி.

5. ‘அலைகடல் கடைந்த’ என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘உன்னைக்கொண்டு’ என்று தொடங்கி. ‘ஆரமுதே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘உன்னையே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

6. ‘ஆரமுதே’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இவருடைய’ என்று தொடங்கி.