தண
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
6 |
79 |
தண்ணீர் சூழ்ந்த திருவரங்கத்தில்
உள்ளவனே!’ என்பாள்; ‘வெம்மை பொருந்திய வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில் என்னும் ஐந்து
ஆயுதங்களையும் தரித்திருக்கின்ற விண்ணோர் முதல்வனே!’ என்பாள்; படத்தைக் கொண்டுள்ள ஆதிசேடனைப்
படுக்கையாக வுடையவரே! இவள் விஷயத்தில் திருவருள் புரிகின்றீர் இலீர்; அது பாவியேனுடைய செயலிடத்தது’
என்கிறாள். என்றது, ‘இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தி பெற இருக்கிற என் பாபமன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடியாம்.
வி - கு :
மூன்றாம் அடியில், பஞ்சாயுதங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ஈடு:
ஆறாம் பாட்டு. 1‘இவள் இவ்வளவு ஆபத்தை
அடைந்தவளாயிருக்க, இவள் துயரத்தைத் தீர்த்து அருளாதொழிகைக்குக் காரணம் என்னுடைய பாபமே’
என்கிறாள்.
மையல் செய்து என்னை
மனம் கவர்ந்தானே என்னும்- 2உணர்த்தி உண்டாகில் நெஞ்சு இழவாள்காணும். 3பகைவர்ளுடைய
சமயம் பார்த்திருந்த அவர்களை கோட்டை கொள்ளுவாரைப் போலே. கடலைத் தரை கண்டான் என்னமாறு
போலே இருத்தலின், ‘என்னை’ என்கிறது. 4புழுகூற்றிச் சட்டம் போகடுவாரைப்
போலே இருத்தலின், ‘மனம் கவர்ந்தான்’ என்கிறது. 5கொன்று கிழிச்சீரை
அறுப்பாரைப் போலே இருத்தலின், ‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’ என்கிறது. மா மாயனே
என்னும்- 6மையல் செய்த பிரகாரங்கள், என்றது,
___________________________________________________________________
1. ‘பாவியேன் செயற்பாலதுவே’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. மையல் செய்த பின்
‘மனம் கவர்ந்தான்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘உணர்த்தி’ என்று தொடங்கி.
3. உணர்ச்சியை நீக்கி நெஞ்சினைக்
கவர்ந்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘பகைவர்களுடைய’ என்று தொடங்கி.
4. சரீரத்தைப் போகட்டுச்
சாரமான மனத்தினைக் கவர்ந்ததற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், புழுகூற்றி’ என்று தொடங்கி.
5. மயக்கத்தை விளைத்து நெஞ்சனைக்
கவர்ந்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘கொன்று’ என்று தொடங்கி.
6. மேலுக்கெல்லாம்
அவதாரிகை, ‘மையல் செய்த பிரகாரங்கள்’ என்பது. ‘மா மாயன்’
என்றது முதல் ‘விண்ணோர் முதல்’
என்னுமளவும் கடாட்சித்து ‘மையல் செய்த
பிரகாரங்கள்’ என்கிறார்.
|