பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1

8

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    1‘பலநீ காட்டிப் படுப்பாயோ?’, ‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ என்று சொல்லுகிறபடியே அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச்செய்தேயும் பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில், 2பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவாநின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக்கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ? புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே? 3அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்: உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிறபடியையும் கண்டார்: ‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.

    4
ஸாகா ம்ருகா - பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை. பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; - திசைப் பாலகர்களையுங்கூட

_______________________________________________________________________

1. இவர் இந்திரியங்களுக்குப் பயப்பட்டு கூப்பிடுகிற இது, அசம்பாவிதம் என்று
  சங்கிக்கிறார், ‘பல நீ காட்டி’ என்று தொடங்கி. திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.

2. இந்த இரண்டு விதமான சங்கைகட்கும் பரிஹாரம் அருளிச்செய்கிறார், ‘பக்கத்து வீடு’
  என்று தொடங்கியும், ‘புற்றின் அருகே’ என்று தொடங்கியும்.

3. ‘நன்று; இங்கு உபமேயத்தில் (தார்ஷ்டாந்திகத்தில்) மயக்கத்திற்குக் காரணம் யாது?’
  என்ன, ‘அங்குத்தைக்கும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. வியசனத்தாலே கூப்பிடுகிறதற்கு மூன்று திருஷ்டாந்தங்கள் காட்டுகிறார்: முதல்
  திருஷ்டாந்தம், ‘ஸாகா ம்ருகா:’ என்று தொடங்குவது.

        ‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா:
         நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
         ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா:
         ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’

என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45. ‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று
விசேடித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பூசலிலே’ என்று