ஒழ
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
6 |
81 |
ஒழிவதே! 1திவ்விய
ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு
கிடப்பது. 2இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?
பை கொள் பாம்பு அணையாய் - 3புன்சிரிப்போடு. திவ்ய ஆயுதங்களோடு, நித்திய விபூதியையுடையனாயிருக்கிற
இருப்போடு, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாக
இருக்கிறபடி. 4பகவானுடைய திருமேனியின் ஸ்பரிசத்தால் உண்டான உவகையாலே மலரந்த
படங்களையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவரே! தனிப்படுக்கையிலே சாய்வதே நீர்,
இவள் தரைக்கிடை கிடக்க? இவள் திறத்து அருளாய் - 5படுக்கையில் சேர்த்தி பெறாவிட்டால்,
உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழியவேணுமோ? இவள் திறத்து - பாடோடிக் கிடக்கிற
இவள் திறத்து. அருளாய் - அருள்கொள்வார் தேட்டமான நீர், அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித்
தரைக்கிடை கிடக்கவிட்டு வைப்பதே! பாவியேன் - 6நீர் அருளாதவர் அல்லீர்; இவள்
அது பெறாவிடில் ஜீவிப்பாள் அல்லள்;
___________________________________________________________________
1. திவ்விய ஆயுதங்களைக்
கூறிய பின் ‘விண்ணோர்முதல்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘திவ்விய ஆயுதங்களினுடைய’
என்று தொடங்கி.
2. ‘அவர்களுடைய ஜீவனத்துக்காகவோ
தரித்திருக்கிறான்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இல்லையாகில்’ என்று தொடங்கி.
3. காதலி ‘மாயன்’ என்பது
போன்றனவற்றைச் சொல்லாமல், ‘விண்ணோர் முதல்’ என்று
நித்தியவிபூதியிலே இருக்கிற இருப்பைக்
கூறியதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘புன்சிரிப்போடு’ என்று தொடங்கி.
4. பதங்கட்குப் பொருள்
அருளிச்செய்கிறார், ‘பகவானுடைய’ என்று தொடங்கி,
‘பாம்பணையாய்’ என்று விளித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘தனிப்
படுக்கையிலே’ என்று தொடங்கி.
5. ‘அருளாய்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘படுக்கையில்’ என்று தொடங்கி.
அருளாய்-அருளுகின்றிலை; எதிர்மறை.
6. ‘பாவியேன்’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நீர் அருளாதவர்’ என்று
தொடங்கி.
|