பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

இரண்டாந்திருவாய்மொழி - பா. 8

89

முடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல். ஆவி அனல வெவ்வுயிர்க்கும் -தொழுதவுடனே வரக்காணாமையாலே, ‘பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று, எரிக்க முடியாத ஆத்துமாவானது நெருப்பு மயமாம்படி 1‘நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’ என்கிறபடியே, நெடுமூச்சு எறியும்.

    அஞ்சன வண்ணனே என்னும் - ‘நெருப்பிலே நீரைச் சொரிந்தாற்போலே அக்குளிர்ந்த வடிவைக் கொண்ட வந்து தோற்றவல்லையே!’ என்னும். 2மேகஸ்யாமம் -மேகம்போல் கருநிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ? ‘கைகேயி வார்த்தையால் பிறந்த தாபமுடைய ஆறுங்கண்டீர் அவ்வடிவழகிலே விழிக்கப் பெற்றோமாகில்’ என்றார்களே அன்றோ? எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் - 3வடிவினை நினைத்தாவாறே தரித்து எழுந்திருந்து வருவதற்குத் தகுதியுள்ள திக்கினைப் பார்த்து, முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று இமை கொட்டாதே பார்த்துக்கொண்டிருக்கும். எங்ஙனே நோக்குகேன் என்னும் - தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக்கொள்ளும்’ என்று 4புரிந்து பாராநிற்கும். அன்றிக்கே, 5வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து, ஆனைக்கு உதவினாற்போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து ‘முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று

____________________________________________________________________

1. ‘தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’

என்பது, ஸ்ரீராமா. யுத். 117:6.

2. ‘மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 83:8. இச்சுலோகத்திற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார், ‘கைகேயி’ என்று தொடங்கி.

3. ‘மோஹித்தவள் எழுந்திருக்கக் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘வடிவினை நினைத்தவாறே’ என்று தொடங்கி.

4. ‘புரிந்து பாராநிற்கும்’ என்றது, பின்னே கட்டிக்கொள்ளும் என்று புரிந்து பார்த்து,
  ‘பின்னே இருந்தால் நான் நோக்கும்படி எங்ஙனே?’ என்னும் என்றபடி,
  புரிந்து-விரும்பி.

5. ‘எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்’ என்றதன் பொருளை
  அநுவதித்துக்கொண்டு, ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்றதற்கு வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார், ‘வடிவினை நினைத்தாவாறே’ என்று தொடங்கி.