உதவ
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
9 |
93 |
உதவினால் ஆகாதோ?’ அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல். ஒன்று இரண்டு அன்றிக்கே
இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி. 1அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே
இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே. உருவென்பது - இடி. ‘இடிபோலே பயங்கரமான
குரலையுடைய ஏறு’ என்னுதல். அன்றிக்கே, உருவென்று மிடுக்காய், மிடுக்குத்தான் வடிவு கொண்டாற்போலே
என்னுதல். 2‘உருவுட்கு’ என்பது உரிச்சொல். நீ கொண்ட - நீ கைக்கொண்ட. ஆய்மகள்
அன்பனே என்னும் - 3‘என்னைக் கைவிட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம்
பெற இருக்கிறாய்?’ என்னும். தென் திருவரங்கம் கோயில் கொண்டானே - தெற்குத் திசைக்குச்
சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே! 4‘எருது
ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ? அவதாரங்கள்
போல அன்றியே நித்தியவாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ? 5‘தன்னுடைய
மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று. தெளிகிலேன் -
6அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன்.
7‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான
____________________________________________________________________
1. அடர்த்து என்னாமல்
‘தழுவி’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அவள்’
என்று தொடங்கி.
2. ‘உருவுட்காகும் புரையுயர்
பாகும்’ என்பது தொல்காப்பியம், சொல்லதிகாரம்.
3. வெறுப்பாக பாவம்
அருளிச்செய்கிறார், ‘என்னை’ என்று தொடங்கி. ‘ஸ்வாமிநிகள்’
என்றது, மேலே கூறிய பிராட்டிமார்
மூவரையும்.
4. ‘கோயில் கொண்டானே’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘எருது ஏழ்’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
‘அவதாரங்கள் போல’ என்று தொடங்கி.
5. அவதாரங்கள் ஒரு காலத்தில்
உண்டாவடு என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘தன்னுடைய’ என்று தொடங்கி.
‘கத: ஸ்வம் ஸ்த்தாநம்
உத்தமம்’
என்பது பாரதம்.
6. ‘அங்குக் குறை அற்ற
பின்பு’ என்றது, ‘திருவரங்கம் கோயில் கொண்டானே’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
7. அதனை
விவரணம் செய்கிறார் ‘மாஸூச:’ என்று தொடங்கி.
|