பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

சூர

96

திருவாய்மொழி - ஏழாம் பத்து

சூரிகளுக்கு நாதனானவனே’ என்னும். 1‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு, ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு: மயர்வற மதிநலம் பெறுகையாலே; 2விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர். வண்திருவரங்கனே என்னும் - நித்தியசூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்திய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ இங்கு வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது? ‘இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெறவேண்டாவோ?’ என்னும்.  வண்மையாவது, ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.

    அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-‘ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்துகொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்; ‘அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து கிரமத்திலே கிட்டிக்கொண்டு நின்றாள்’ என்று அருளிச்செய்யும்படி. 3இதுதான், மானச அனுபவித்தில் ஒரு தெளிவினைச் சொன்னபடி. அடி அடையாதாள் போல - இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்: இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்துகொடு நின்றாள் என்னுதல். இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி துக்கத்தையடைந்தவளான இவள், கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காளமேகம் போன்ற நிறத்தையுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.

(10)

_____________________________________________________________________ 

1. ‘நன்று; ‘வானோர் தலைவனே’ என்று, அசாதாரண விக்கிரஹவிசிஷ்டனையும்,
  ‘மூவுலகாளியே’ என்பது முதலாகச் சாதாரண விக்கிரஹவிசிஷ்டனையும் ஒருசேர
  அனுபவிப்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வடிவுடை’
  என்று தொடங்கி, விசிஷ்டன்-கூடினவன்.

2. அதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘விசேஷணாம்சத்தில்’ என்று
  தொடங்கி.

3. ‘ஆனால், பிரத்யக்ஷமாகக் கிட்டினாளோ?’ எனின், ‘இதுதான்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.