வேண்டிய இறுதிச் சடங்குகளை ஊரார் செய்து வைத்தனர். மறுநாள் காலையில் கோவிலைத் திறந்து பார்க்க, இப்பெருமாள் ஈர வேட்டியுடனும் மாற்றியுள்ள பூணூலுடனும் தர்ப்பணங்களுடனும், இறுதிக்கடன் சடங்குகள் செய்யும் கோலத்துடன் காட்சியளித்தார். எத்துனை மெய்சிலிர்க்கச் செய்யும் நிகழ்ச்சி. 18. குடந்தையில் “ஸௌந்தர்யம் பிரஸித்தம்” என்பது வடமொழி. ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் என்பது ஆழ்வார்கள் மொழி. 19. துணில முற்றம் என்று பெரியாழ்வாரின் பாசுரத்தில் கூறப்படும் இடம் இக்கோவிலின் வடக்குப் பிரகாரமாகும். 20. உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என்ற இருவாசல்களுண்டு. முறைப்படி உத்ராயண காலத்தில் உத்ராயண வாசல் வழியிலும் தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசல் வழியிலும் வழிபாடு செய்யப்படும் முறை இன்றும் விளங்குகிறது. 21. பொங்குதண்குடந்தை, நலத்தால் மிக்கார் குடந்தை, திசைவில் வீசும் செழுமாமணிகள் சேரும் செழுநீர் திருக்குடந்தை, என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் சகல பாவங்களும் போகும். 22. பெருமாளின் கருவறையைச் சுற்றிச் செல்லும் போது அந்த அழகான திருக்காட்சி நம் கண்ணைக் கவர்கிறது. சுவாமியின் கருவறையே (மூலஸ்தானமே) தேர்வடிவில் அமைந்துள்ளது. மிகவும் பிர்ம்மாண்ட சக்கரங்கள் கொண்ட திருத்தேர். தாயாரைத் திருமணம் செய்ய பெருமாள் வைகுண்டத்திலிருந்து இறங்கிய தேரின் வடிவம் இது. 23. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய செய்யுட்களாலான ஸ்தல புராணமும் உண்டு. |