பக்கம் எண் :

124

குழந்தையன்று எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது நின்றாள்.

     உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து
கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி
என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக காட்சியளித்தார்.
இக்காட்சியைக் கண்டு பேரானந்தமும் மயிர்க் கூச்செறிப்பும் கொண்ட காவேரி
பலவாறு போற்றி எம்பெருமானைத் துதித்துப் பாடினாள். என்ன வரம்
வேண்டுகிறாய் காவேரி, என்று பெருமாள் கேட்டதும், தாங்கள் இதே
கோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும், கங்கையினும் மேன்மையைத்
தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள்.

     அவ்விதமே அருளிய எம்பெருமான் நான் திரேதா யுகத்தில்
நின்னிடத்தில் தங்குவேன் என்று கூறினார்.

     அவ்வண்ணமே இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை
இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில்
பள்ளிகொண்டார்.

மூலவர்

     ஸாரநாதன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     ஸார நாயகி அல்லது ஸார நாச்சியார்.

தீர்த்தம்

     ஸார புஸ்கரணி

விமானம்

     ஸார விமானம்

காட்சி கண்டவர்கள்

     காவேரி

சிறப்புக்கள்

     1. 108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5
தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை. இங்குள்ள
மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம்
எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம்
வைத்துள்ளதற்கொப்பானதாகும்.

     2. திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூச
நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12