பக்கம் எண் :

136

     இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது
அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு
சொல்லப்பட்டுள்ளது.

     ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம்
          ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம்
     நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ
          ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம்
     திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத
          அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

     2. சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம்
எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம்
என்றும் கூறுவர்.

     3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்”
நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு
தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே
விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம்
செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய
தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

     4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும்
காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம்
வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும்
அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

     5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7
புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள
இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

     6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம்
வழங்கப்படும்.