| 13. ஊராக்கிணறு இன்று ஒரு நாள் இங்கு தங்குவதற்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்ட திருமங்கையாழ்வாருக்குச் சில மணி நேரம் சென்று தாகம் எடுக்கவே, அந்த ஊர்க் கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஒரு பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். இவன் நிலத்திற்கு தாவா செய்தது போல் நம்பானைக்கும் தாவா செய்துவிடுவானோ என்று எண்ணிய அப்பெண் தண்ணீர் தரமுடியாது என்று மறுத்துவிட்டாள். இந்த ஊரின் கிணறுகளில் தண்ணீர் ஊராமல் போகக் கடவது என்று திருமங்கை சபித்து விட்டார். இன்றும் இந்த ஊர்க் கிணறுகளில் தண்ணீர் சரியாக ஊறுவதில்லை. அப்படியே தண்ணீர் இருந்தாலும் அதுவும் உப்பாகத்தான் உள்ளது. இதை இன்றும் நேரடியாகச் சென்றால் காணலாம். அரசாங்கத்திலிருந்து வெகு ஆழமாகத் தோண்டி நல்ல தண்ணீருக்காக ஓவர் டேங் அமைக்க அதுவும் உப்பாய் போய்விட்டது. இப்போது உள்ள கோவிலுக்குள் இறைவனின் திருமஞ்சனத்திற்காக தண்ணீர் எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது. விடிந்தால் எல்லோரும் இங்கு வந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலையை இன்றும் காணலாம். எனவே ஊராக்கிணறு திருக்கண்ணங்குடி என்பது சாலவும் பொருந்தும். 14. காயா மகிழ் ஊராக் கிணறாகக் கடவது என்று சபித்துவிட்டு மிகுந்த பசி மயக்கத்தோடு அங்கிருந்த மகிழ மரத்தடியில் அயர்ந்து அமர்ந்தார் திருமங்கை. அப்போது ஸ்ரீமந் நாராயணனே தீர்த்தப் பிரசாதத்தோடு வந்து இவரைத் தட்டியெழுப்பி, நீவிர் யாவர் என்று கேட்க, நானொரு வழிப்போக்கன் என்றார் திருமங்கை. வழிப்போக்கரா சரி, பசி மயக்கத்தோடு இருப்பது போலத் தெரிகிறதே, முதலில் இதைச் சாப்பிடும் என்று தன்னிடம் இருந்த உணவைக் கொடுக்க தன்னை மறந்த |