வொளியும் நிலவொளி போன்றதென்று ஆழ்வார்கள் புகழவில்லையா, அதற்குத்தான் எம்பெருமானும் இப்பெயர் தோன்ற நின்றாரோ என்னவோ ஆழ்வார்கள் எம்பெருமானின் திருமுகப் பொலிவில் மயங்கி நின்றதை இங்கு எடுத்துக்காட்டுவோம். “திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்” - என்றும் “கதிர்மதியம்போல் முகத்தான்” - என்றும் ஆண்டாள் மயங்குகிறாள் நேமியும் சங்கும் இருகைக் கொண்டு பண்ணெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றொடு பால்மதியேந்தி, ஓர் கோல நீல நன்னெடுங் குன்றம் வருவதொப்பான் - என்று நம்மாழ்வார் நயங்காட்டுகிறார். திருநீர்ச் சந்திரமண்டலம் போல செங்கண்மால் கேசவன் -என்று பெரியாழ்வார் பெரிதுபடுத்துகிறார். சலம்பொதியுடம் பில் தழலுமிழ்ப் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிரஞ்ச மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண உருவில் மால் புருடோத்தமன், என்றும் “வாணிலா முறுவல்” என்றும் திங்களப்பு வாணெரி கா லாகி திசை முகனார் தங்களப்பன் | என்று திருமங்கையாழ்வாரும் காட்டவில்லையா இவ்வாறெல்லாம் எம்பெருமானைக் கதிர்களுக்கு உவமைப்படுத்தி சந்திர முகமாக ஆழ்வார்கள் கொண்டாடின அழகை தனக்குப் பெயராகவே சூட்டிக்கொண்டு திகழ்கிறார் இந்த நாண்மதியார். 3. சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் |