பக்கம் எண் :

195

     என்பது ஸ்ரீ வி.வி.எஸ்.அய்யரின் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.

     (Above lines are taken from Thirukkural English translation by
Sri. V.V.S.Ayyar. Dedicated to Bharadwaja Ashramam,
Cheranmahadevi)


     7) திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு
உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஞானசம்பந்தரை
வாதில் வென்று அவரது வேலை மங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த
தலத்தில்தான். திருமங்கையாழ்வார் வடதேச யாத்திரை சென்று இவ்வூரின்
வழியாகத் திரும்பும் சமயம், அவரின் சீடர்கள் திருமங்கையின்
பட்டப்பெயர்களை உரக்க கூவிக் கொண்டு வர அங்கு நின்றிருந்த
சிவனடியார்கள் இப்போது ஞான சம்பந்தர் இங்கு எழுந்தருளியிருப்பதால்
நீங்கள் யாரும் உங்கள் தலைவரின் விருதுப் பெயர்களை இங்கே
கூவிக்கொண்டு செல்லலாகாது என்று கூற, இவர்கள் அப்படித்தான்
சொல்லிக்கொண்டு செல்வோம் என்று கூற வாதம் வளர்ந்து, இறுதியில்
ஞானசம்பந்தரும், மங்கையாழ்வாரும் வாதுக்குத் தயாரானார்கள்

     திருமங்கையை நோக்கிய ஞான சம்பந்தன் உம்மைப் பெரிய
வரகவியென்று விருதோதிச் செல்கிறார்களே, உம்மால் ஒரு குறள் சொல்ல
முடியுமா என்று கேட்க, உடனே மங்கை மன்னன்,
 

     ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
          உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி - ஒன்றும்
     தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
          தாடாளன் தாளனைவீர் தக்க கீர்த்தி
     அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்
          அங்கங்கங்கள வைகளாறும் இசைகளேழும்
     தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்
          சீராம விண்ணகரே சேர்மினீரே
                           -என்று அவர் கூறிய குறள்

     என்னும் வார்த்தையையே கவியின் முதலடியாகக் கொண்டு, ஒன்று,
இரண்டு, மூன்று, நான்கு என எண்வரிசையிலும் பாடி தொடர்ந்து வரும்
பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து அவதாரங்களை விளக்கி நிற்க,
இத்திறன் கண்டு வியந்த ஞான சம்பந்தர்