5) வேடுபறி உற்சவம் ஆண்டு தோறும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. 6) குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே அழைக்கப்படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது இந்த மங்கை மடம். எந்நேரமும் போக்குவரவு வசதி மிக்க இடமாகத் திகழ்கிறது. 7) ததியாரதனம் (அன்னதானம்) நடத்தப்பட்ட மங்கை மடத்தில் உள்ள வீர நரசிம்மப் பெருமாள் சன்னதி பஞ்ச நரசிம்மச் ஷேத்திரங்களுள் ஒன்றாகும். 8) நம்மாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆழ்வார் திருநகரியாயிற்று இவரின் அவதாரஸ்தலம் திருவாலி திருநகரியாயிற்று. 9) ஆண்டாள் மனத்துக்கினியானிடம் ஈடுபட்டார். இவரோ சிந்தனைக்கினியானிடம் ஈடுபட்டார். 10) இங்குள்ள இலாக்ஷ்ண புஷ்கரணியை கங்கையின் அம்சமாக நூல்கள் சிலாகித்துப் பேசுகின்றன. |