| நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள். அதாவது, சோழநாட்டில் - 40 திவ்ய தேசங்கள் பாண்டி நாட்டில் - 18 திவ்ய தேசங்கள் மலை நாட்டில் - 13 திவ்ய தேசங்கள் நடு நாட்டில் - 2 திவ்ய தேசங்கள் தொண்டை நாட்டில் - 22 திவ்ய தேசங்கள் வட நாட்டில் - 12 திவ்ய தேசங்கள் திருநாட்டில் - 1 திவ்ய தேசம் ----- 108 ----- இந்த 108 திவ்ய தேசங்களில் 106னைச் சேவித்தவர்களை அவர்கள் இப்பூவுலகில் வாழவேண்டிய காலக்கட்டாயம் முடிவுற்றதும் எம்பெருமானே இரண்டு திவ்யதேசங்கட்கும் அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது தலையாய வைணவக் கொள்கையாகும். 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும் மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர் ஆழ்வாரானார். மீதி பதினொரு ஆழ்வார்களும் கீழ்க்கண்டவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆழ்வாரின் பெயர், மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களின் எண்ணிக்கை 1. பொய்கையாழ்வார் 6 2. பூதத்தாழ்வார் 13 3. பேயாழ்வார் 15 4. திருமிழிசையாழ்வார் 17 5. நம்மாழ்வார் 37 6. குலசேகராழ்வார் 9 7. பெரியாழ்வார் 18 8. ஸ்ரீ ஆண்டாள் 11 9. தொண்டரடிப் பொடியாழ்வார் 1 |