நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார். பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மாபாராதம் கை செய்த மாவுருவத்தை தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்குபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன் அவ்விதமே செய்தான். யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. மூலவர் பாண்டவ தூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். மிகப் பிரம்மாண்டமான திருமேனி. தாயார் ருக்மணி சத்தியபாமா விமானம் பத்ர விமானம், வேத கோடி விமானம் தீர்த்தம் மத்ஸய தீர்த்தம் காட்சி கண்டவர்கள் ஜெனமேஜெய மகராசன், ஹாரித முனி சிறப்புக்கள் 1) அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது. 2) கர்ப்பக் கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து |