10. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. 11. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன. 12. இந்த வைகுண்டப் பெருமாள் அடியார்கள் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவன். தன்னை நேசிப்பவர்களையும், பூசிப்பவர்களையும் கண்டு மனது நெகிழ்கின்றவன். அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கண்காணித்துக் கொள்பவன். தன் அடியார்கள் மீது அன்பு செலுத்தச் செய்து பிறகு தனக்கடிமை ஆக்கிக்கொள்ளும் தகவினன். நானும் அவ்வாறே செய்தேன். அவன் கனிந்த தமிழில் என்னை பாடுமாறு வைத்தான். அவன் பதமே தஞ்சமென்று உள்ள அடியார்கட்கு என்னை ஆட்படுத்திவைத்தான். இவன்தான் நன்மையே செய்யும் பரமேச்சுர விண்ணகரத்தான் என்று பிள்ளைப் பெருமாளய்யங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் துதிக்கிறார். பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன் பதத்தடியார்க்கே யாட்படுத்தான் - இதந்த பரமேச்சுர விண்ணகரான் பலவான் வரமேச்சுர லணைந்த மால் | இப்பெருமானின் ஸ்தல வரலாற்றுப் பண்புகளோடு இது பொருத்தி வருவதும் ஈண்டு நோக்கத் தக்கதாகும். |