செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார். 5. நம்மாழ்வார் மட்டும் 12 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். 6. ஸ்ரீஸ்வாமி தேசிகன் தனது ப்ரபந்த ஸாரத்தில் இத்தலத்தினையும் மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் பின் வருமாறு கூறுகிறார். “தேறிய மாஞானமுடன் திருக்கோளுரில் சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு அனவரத மந்தரங்க வடிமை செய்து மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவு மற்றறியே னெனும் மதுரகவியே நீ முன் கூறிய கண்ணி நுண் சிறுத்தாம்பதினிற் பட்டுக் குலவு பதினொன்று மெனக்குதவு நீயே” என்பர் | 7. மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார் 8. மதுர கவியாழ்வாரின் அவதாரதினத்தையும் திருக்கோளுரையும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பின்வருமாறு கூறுகிறார். “ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரைநாள் பாரு லகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் உற்ற தெமக்கென நெஞ்சே ஓர்” - என்கிறார். சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளுர் ஏரார் பெரும் புதூர் என்னுமிவை பாரில் மதி யாகும் ஆண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் - என்பது உபதேசரத்தினமாலை. | |