பக்கம் எண் :

503

     இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல
இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

     துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற
பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம்
பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில்
மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக்
கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத்
திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் “மகர
நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும்
மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய
அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே
மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச்
சம்மதித்தார்.

     ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு
தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.

     108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில்
திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென்
திருப்பேரை என்று அழைத்தனர்.

மூலவர்

     மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி
வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

     குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்

விமானம்

     பத்ர விமானம்

தீர்த்தம்

     சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

சிறப்புக்கள்

     1. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம்
நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று
வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர், தனது பாசத்தை
(வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது
திகைத்து தனது குருவான